மாநாடு படத்தின் மூலம் பாக்ஸ் ஆபிஸை கலங்கடித்த வெங்கட் பிரபு தற்போது நாக சைத்தன்யாவை வைத்து கஸ்டடி திரைப்படத்தை இயக்கியுள்ளார். கடந்த சில நாட்களாகவே இப்படத்திற்கான ப்ரமோஷன் வேலைகளும் களைக்கட்டியது. அதை தொடர்ந்து ட்ரெய்லர் காட்சிகளும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படி ரசிகர்களின் ஆர்வத்தை அதிக அளவில் தூண்டி இருந்த கஸ்டடி இன்று வெளியாகி உள்ளது. இதற்காகவே காத்திருந்த நாக சைத்தன்யா ரசிகர்கள் முதல் காட்சியை பார்த்ததுமே தங்கள் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளனர். அதன்படி சோசியல் மீடியா முழுவதுமே இப்போது கஸ்டடி பற்றிய பேச்சாக தான் இருக்கிறது.
Also read: இந்த வாரம் தியேட்டரை குறிவைத்த 4 படங்கள்.. நாக சைதன்யாவுக்கு போட்டியாக வரும் ராசாகண்ணு
அந்த வகையில் ரசிகர்களின் பார்வையில் இப்படம் ஆஹா ஓஹோ என்று புகழப்பட்டு வருகிறது. ஆனால் சில நெகட்டிவ் விமர்சனங்களும் இப்படத்திற்கு வந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது படத்தின் வேகம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற ஒரு குறையை ரசிகர்கள் முன் வைக்கின்றனர்.

அதிலும் முதல் 30 நிமிட காட்சிகள் ஆமை வேகத்தில் இருப்பதாக கூறியுள்ளனர். ஆனால் நாக சைத்தன்யாவின் நடிப்பில் இருக்கும் டெடிகேஷன் பாராட்டும் வகையில் இருக்கிறது. அதைத் தொடர்ந்து பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

இப்படி படத்திற்கு சில பாராட்டுக்கள் கிடைத்தாலும் அரவிந்த் சாமியின் கேரக்டர் கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் படத்தின் முதல் பாகம் சொதப்பலாக இருந்தாலும் இரண்டாம் பாதி விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது.

அந்த வகையில் வெங்கட் பிரபு, நாகச் சைத்தன்யா கூட்டணியில் வெளிவந்துள்ள இந்த கஸ்டடி தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இனிவரும் நாட்களில் இப்படம் ரசிகர்களை கவருமா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Also read: லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?