வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லியோவை வைத்து கஸ்டடியை வியாபாரம் செய்யும் வெங்கட் பிரபு.. தல தப்புமா?

சோசியல் மீடியாவை திறந்தாலே லியோ பற்றிய செய்திகள் தான் வந்து விழுகிறது. லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே இப்படம் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இதை வைத்து தன் படத்துக்கு ப்ரமோஷன் தேடி இருக்கிறார் இயக்குனர் ஒருவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா, கீர்த்தி செட்டி, அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கஸ்டடி. வரும் 12ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் ப்ரமோஷன் வேலைகள் இப்போது ஜோராக நடந்து கொண்டிருக்கிறது.

Also read: தளபதியை வைத்து பப்ளிசிட்டி தேடும் பாலிவுட்.. இணையத்தில் ட்ரெண்டாகும் விஜய் 69

அதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பும் சமீபத்தில் நடைபெற்றது. அதில் பேசிய வெங்கட் பிரபு, பான் இந்தியா படங்கள் பாகுபலி படத்திற்கு பின் தான் அதிகமாக வர தொடங்கி விட்டது. அதுவே பாக்ஸ் ஆபிஸ் மாற்றத்திற்கும் காரணமாக இருக்கிறது என கூறிய அவர் லியோ படம் குறித்தும் பெருமையாக பேசியிருக்கிறார்.

மேலும் லோகேஷ் இப்போது சர்வதேச அளவில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் தன்னுடைய படங்கள் மூலம் ஒரு அற்புதத்தையும் அவர் நிகழ்த்த இருக்கிறார். அதற்கு உதாரணமாக லியோ படத்தை சொல்லலாம். அப்படத்திற்கு இப்போது உச்சகட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also read: மனோபாலாவுக்காக கடைசி ஆசையை நிறைவேற்றிய லியோ.. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த விஜய்யின் புகைப்படம்

அதற்கேற்றார் போல் ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் அதில் நடித்து வருகின்றனர். அது தவிர நாம் எதிர்பார்க்காத பல சர்ப்ரைஸ்களையும் பட குழு கொடுத்துக் கொண்டிருக்கிறது. இதுவே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு வழிநடத்தி செல்லும் என்று லோகேஷை அவர் தாறுமாறாக புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.

இதுதான் தற்போது சில விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் கஸ்டடி படத்தை வியாபாரம் செய்யும் நோக்கில் தான் அவர் லியோ படத்தை புகழ்ந்து தள்ளி இருப்பதாக பலரும் கூறுகின்றனர். அந்த வகையில் வெங்கட் பிரபுவின் இந்த பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதையும் கஸ்டடி எதிர்பார்த்த வசூல் பெறுமா என்பதையும் நாம் இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ளலாம்.

Also read: லியோ படத்தில் இத்தனை பாடல்களா?. அனிருத், லோகேஷ் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான்

Trending News