திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

எந்த பால் போட்டாலும் சிக்ஸர் அடிக்கும் கோட் படக்குழு.. விஜய்யை மெர்சல் ஆக்கிய வெங்கட் பிரபு

Venkat prabhu: நீ நதி போல் நிற்காமல் ஓடிக் கொண்டிரு என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப விஜய் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி நடித்து ரிலீஸ் பண்ணிக் கொண்டே இருக்கிறார். இதனாலையே தமிழ் சினிமாவில் ஆட்டநாயகனாகவும், வசூல் மன்னனாகவும் ஜொலித்து வருகிறார். தற்போது இதையும் தாண்டி அரசியலிலும் ஜெயிக்க வேண்டும் என்று முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிக மும்மரமாக போய்க்கொண்டிருக்கிறது. இதில் விஜய் கொஞ்சம் பிரேக் எடுத்தால் அந்த கேப்பை கூட வேஸ்ட் பண்ணாமல் வெங்கட் பிரபு மிச்சமிருக்க வேலையை பார்த்து வருகிறார். அந்த அளவிற்கு வெங்கட் பிரபு படப்பிடிப்பை முடிப்பதற்கு ஸ்பீடாக இருக்கிறார்.

அந்த வகையில் விஜய், வெங்கட் பிரபுவிடம் மூன்று நாள் நான் கொஞ்சம் பிசி. அதனால் நீங்கள் மற்ற வேலைகள் ஏதாவது இருந்தால் அதை முடித்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார். உடனே வெங்கட் பிரபுவும் கொஞ்சம் கூட நேரத்தை வேஸ்ட் பண்ணாமல் மற்ற ஆர்டிஸ்ட்களை வைத்து எடுக்க வேண்டிய காட்சிகளை முடித்து விடுகிறார்.

Also read: விஜய், அஜித் வாரிசுகளுக்கு போட்டியான குட்டி சூர்யா.. ஜோவை உரித்து வைத்திருக்கும் தியாவின் வைரல் போட்டோ

அதே மாதிரி விஜய், சூட்டிங் ஸ்பாட்டிற்கு போயிட்டு நாளைக்கும் நான் வரமாட்டேன். அதனால் நீங்கள் யோகி பாபு வைத்து எடுக்கக்கூடிய காட்சியை முடியுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதற்கு வெங்கட் பிரபு அவருக்கான காட்சிகளை எடுத்து முடித்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டு என்று விஜய்க்கு ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸை கொடுத்து வாயடைத்திருக்கிறார்.

ஏனென்றால் யோகி பாபுவை வைத்து சீன்களை எடுத்தது விஜய்க்கே தெரியாது அளவிற்கு வெங்கட் பிரபு மெர்சல் பண்ணியிருக்கிறார். அந்த வகையில் வெங்கட் பிரபு இருக்கும் வேகத்தை பார்த்தால் எப்படி நாளும் இன்னும் கூடிய விரைவில் படத்தை முடித்து விடுவார் என்ற நம்பிக்கை வந்து விட்டது.

அது மட்டும் இல்லை விஜய் மட்டும் ஓகே என்று சொல்லிவிட்டால் மொத்த படத்தையும் வெறும் 40 நாட்களுக்குள் முடிச்சு விடுவாராம். அந்த அளவிற்கு உத்வேகமாக செயல்பட்டு வருகிறார். இவர் இருக்க ஸ்பீடை பார்த்த விஜய் இப்படத்தை முடித்துவிட்டு இவருடைய 69 ஆவது படத்தையும் இந்த வருடத்திலேயே முடித்து விடுவார் போல அந்த அளவிற்கு எல்லாம் கைகூடி வருகிறது.

Also read: சாட்டை எடுத்து நாட்டை திருத்து.. ரஜினி அஜித் செய்யாததை செய்து காட்டிய விஜய்

Trending News