திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் சேதுபதி மகளின் கேரியரை காலி செய்த வெங்கட் பிரபு.. தளபதி 68க்கு வரப்போகுது ஆப்பு, பயத்தை காட்டிட்டியே பரமா!

இயக்குனர் வெங்கட் பிரபு இன்றைய இளைஞர்களுக்கு ஏற்ற படத்தை இயக்கி ரசிகர்களிடையே பிரபலமானவர். முற்றிலும் புதுமுக ஹீரோக்களை வைத்து, கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு இவர் எடுத்த சென்னை 28 திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் நடிகர் அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்தி வெற்றியும் பெற்றார்.

வெங்கட் பிரபுவின் படங்கள் என்றாலே ஜாலிக்கும், பார்ட்டிக்கும் பஞ்சம் இருக்காது. அவருடைய படங்களே ஒரு கொண்டாட்டமாக இருக்கும். சினிமாவில் மொத்தமாக ஓரம் கட்டப்பட்ட நடிகர் சிம்புவின் பிளாக்பஸ்டர் கம்பேக்கிற்கு மிக முக்கிய காரணமே வெங்கட் பிரபு தான். அவர் இயக்கிய மாநாடு திரைப்படத்திற்கு பிறகு தான் சிம்புவின் மீது இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கையே வந்தது.

Also Read:என்னது வெங்கட் பிரபு கூட்டணியில் விஜய்யா.? ஓவர் ரிஸ்கில் தளபதி-68

பெரிய, பெரிய ஹீரோக்களை வைத்து இவர் படம் பண்ணவில்லை என்றாலும் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு மிகப்பெரிய அடையாளம் இருக்கிறது. அந்த அடையாளம் தான் இன்று தளபதி விஜய்யின் படத்தை இயக்கும் அளவுக்கு வெங்கட் பிரபுவை உச்சத்தில் கொண்டு சென்றிருக்கிறது. தளபதி 68 படத்தை இயக்கப் போவது வெங்கட் பிரபு தான் என ஓர் அளவுக்கு உறுதியாகிவிட்டது.

ஆனால் உண்மை நிலவரப்படி பார்த்தால் மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவிற்கு சினிமாவில் அந்த அளவுக்கு எதுவும் ஒர்க்அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர் இயக்கிய மன்மதலீலை திரைப்படம் தோல்வியில் மண்ணை கவ்வியது. சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவில் ரிலீசான கஸ்டடி திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களே பெற்றது.

Also Read:தளபதி 68 கூட்டணி உருவானது இப்படிதான்.. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடியே சீக்ரெட் ஆக லாக் செய்த ஏஜிஎஸ்

தென்னிந்திய சினிமாவில் ஓரளவுக்கு வளர்ந்து வரும் முன்னணி ஹீரோயின் தான் கீர்த்தி செட்டி. இவரை கஸ்டடி திரைப்படத்தின் நடிக்க வைத்து மொத்தமாக பங்கம் பண்ணி விட்டார் வெங்கட் பிரபு. தமிழில் கீர்த்தி செட்டிக்கு இப்படி ஒரு தோல்வி படம் அமைந்து விட்டதால் அவருடைய சினிமா கேரியர் கேள்விக்குறியாக தான் தற்போதைய நிலைமையில் இருக்கிறது.

இப்படி வெங்கட் பிரபு தொடர் தோல்விகளை கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜய் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது அவருடைய ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எப்படியும் லியோ படம் பிளாக்பஸ்டர் ஹிட் என்பது உறுதியான ஒன்றுதான். ஆனால் அதன் பிறகு விஜய்யை இயக்கம் வெங்கட் பிரபு வெற்றி படத்தை கொடுப்பாரா அல்லது மற்ற இரண்டு படங்களைப் போல் தோல்வியை தழுவி விடுமா என்பதுதான் விஜய் ரசிகர்களின் பயம்.

Also Read:விஜய் போட்ட தெளிவான ஸ்கெட்ச்.. லியோ, தளபதி 68 படங்களுக்கு சொன்ன குட் நியூஸ்

Trending News