செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

GOAT ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கு இப்ப வாய்ப்பே இல்லை.. வெங்கட் பிரபு கொடுத்த ஷாக்

Goat – Venkatprabhu : வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது கோட் படம். கலகலப்பான படங்களை இயக்கி வரும் வெங்கட் பிரபு மங்காத்தா என்ற மாஸ் ஹிட் படத்தை அஜித்துக்கு கொடுத்திருந்தார். இதை தொடர்ந்து முதல் முறையாக கோட் படத்தில் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார்.

இந்த படத்தில் மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், சினேகா, லைலா போன்ற பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதை தொடர்ந்து ஆங்கில புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகைகளில் கோட் படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது.

இந்த போஸ்டர்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதற்கு இப்போது வாய்ப்பே இல்லை என்பது போல வெங்கட் பிரபு ஷாக் கொடுத்திருக்கிறார். ரசிகர் ஒருவர் கோட் படத்தில் ஃபர்ஸ்ட் சிங்கிளை விரைவில் வெளியிடுங்கள் என்று கேட்டுள்ளார்.

Also Read : என்ன பண்ணாலும் சூர்யா விஜய் மாதிரி வர முடியாது.. சிவக்குமார் குடும்பமே இப்படித்தானா?

அதற்கு வெங்கட்பிரபு இவ்வளவு சீக்கிரமா, இன்னும் அதற்கு நாள் இருக்கிறது என்று கூறி இருக்கிறார். ஆகையால் விஜய் பிறந்தநாளுக்கு கோட் படம் ரிலீஸாகும் என எதிர்பார்த்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தள்ளி போய் உள்ளது. எனவே ஜூன் மாதம் விஜய் பிறந்த நாள் அன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கே இவ்வளவு நாள் காத்திருக்க வேண்டுமா என ரசிகர்கள் ஏக்கத்தில் உள்ளனர். ஆனால் அதற்குள்ளாக ரசிகர்களை குஷிபடுத்த கோட் படத்தில் இருந்து சில போஸ்டர்கள் வெளியாக வாய்ப்பு இருக்கிறது. அதோடு விஜய்யின் அடுத்த படத்திற்காக அறிவிப்பும் விரைவில் வெளியாக உள்ளது.

Also Read : விஜய் கதையை முடிக்க சதி.. இதற்கு ரசிகர்கள் பதில் என்ன?

Trending News