வெங்கட்பிரபு சிம்புவை வைத்து மாநாடு படம் இயக்கியிருந்தார். இப்படம் இவர்கள் ரெண்டு பேரையுமே வேற லெவல்க்கு எடுத்துச் சென்றது. இந்நிலையில் வெங்கட்பிரபு தெலுங்கு படத்தை இயக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. நாக சைதன்யா இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் வெங்கட்பிரபுவின் மாநாடு வெற்றிக்குப்பின் கிட்டதிட்ட தினமும் பத்துக்கு மேற்பட்ட தயாரிப்பாளர்களும், நடிகர்களும் தங்களுக்கு வாய்ப்பு அளிக்குமாறு வெங்கட்பிரபுவை நாடி வருகின்றனர். இந்நிலையில் வெங்கட்பிரபு மாநாடு படத்தை இயக்குவதற்கு முன்பே இயக்கிய படம் மன்மத லீலை.
இந்நிலையில் இப்படம் அடல்ட் மூவி ஆக எடுக்கப்பட்டிருந்தது. இப்படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்து இருந்தார். மன்மத லீலை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் மிக மோசமான பெயர் வாங்கியது. ஏனென்றால் ட்ரெய்லரில் எக்கச்சக்க லிப் லாக் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
மேலும், வெங்கட்பிரபு இதுபோன்ற படங்களை ஏன் இயக்கினார் என்றும், வளர்ந்து வரும் ஹீரோவான அசோக் செல்வனின் பெயரையும் கெடுத்துக் கொண்டார் என எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது. மேலும் இப்படத்திற்கு ஏ சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் மன்மதலீலை படத்தில் ஆபாச காட்சிகள் இடம் பெறவே இல்லை. மேலும் தரமான ஒரு காமெடி படத்தை எடுத்த வெங்கட்பிரபு பெயரை காப்பாற்றிக் கொண்டார். ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் தூக்கலாக இருந்தாலும் எதிலும் எல்லை மீறாமல் எடுத்துள்ளார் வெங்கட்பிரபு.
மேலும் ஆக்ஷன் படங்களில் கலக்கி வந்த வெங்கட் பிரபு மன்மத லீலை படத்தை போன்ற அடல்ட் மூவி எடுத்தாலும் கங்கை அமரனின் குடும்ப மானத்தை காப்பாற்றி உள்ளார். மேலும் எங்கள் குடும்பத்திற்கு என்று ஒரு பெயர் இருக்கிறது. நான் தரம் தாழ்ந்து போக மாட்டேன் என்று நின்றுவிட்டார் வெங்கட் பிரபு. மேலும் எதிர்மறையாக வரும் விமர்சனங்களுக்கு கூட யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என கூறியுள்ளார்