வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோட் படத்தில் விஜய் வெறும் ஒப்புக்கு சப்பாணி தான்.. வியாபாரத்திற்காக தீயாய் வேலை செய்யும் VP

Vijay: வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் விஜய் நடித்து வருகிறார். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கும் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் ஒரு பக்கம் படு வேகமாக நடந்து வருகிறது.

மறுபக்கம் படத்தின் பிசினஸ் வேலைகளும் நடக்கிறது. ஆனால் லியோ படம் அளவுக்கு இந்த வியாபாரம் இல்லை என்பது தான் அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது. லியோ படம் பூஜை போட்ட போதே நீ நான் என பல நிறுவனங்கள் படத்தை வாங்க போட்டி போட்டன. ஆனால் கோட் படத்தில் அது மிஸ் ஆகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் லியோவின் சொதப்பல் தான்.

மேலும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து கணக்கில் அடங்காத நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இது இல்லாமல் கௌரவ தோற்றத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சில பிரபலங்களும் வருகின்றனர். இதில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக த்ரிஷாவும் வர இருப்பதாக சொல்லப்படுகிறது.

கோட் படத்தின் விஜய் பிசினஸ்

இது தவிர ஏஐ டெக்னாலஜி மூலம் விஜயகாந்த் வரும் காட்சிகளும் இருக்கிறது. மேலும் படத்தில் ஏற்கனவே பிரபுதேவா, பிரசாந்த், மோகன், சினேகா, லைலா என ஒரு பட்டாளமே இருக்கிறது.

Bigil (Budget 180c – Pre business 135c – Box Office- 304c)
Master (Budget 130c – Pre business 105c – Box Office- 243.6c)
Beast (Budget 150c – Pre business 125c – Box Office – 235c)
Varisu (Budget 180c – Pre business 140c – Box Office – 303c)
Leo (Budget 225c – Pre business 215c – Box Office- 618c)

அப்படி என்றால் விஜய் இப்படத்தில் டம்மியா என்ற கேள்வியை எழலாம். உண்மையில் அவர் ஒப்புக்கு சப்பாணி என்பதை தான் பட குழு அவ்வப்போது நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இது படத்தின் முதல் பாடலிலேயே வெளிப்படையாக தெரிந்தது.

Maanaadu
Manmadha Leelai
Custody

அதனாலேயே வெங்கட் பிரபு தற்போது புது யுக்தியை கையாண்டு வருகிறார். அதன் ஒரு பகுதி தான் விஜயகாந்த் மற்றும் சிவகார்த்திகேயனை வைத்து நடக்கும் ப்ரமோஷன். தற்போது இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருக்கிறது.

மேலும் வெங்கட் பிரபுவின் இன்றைய படங்களின் பிசினஸை பார்க்கும்போது மாநாடு தான் அவருக்கான வெற்றியாக உள்ளது. கடைசியாக வெளிவந்த கஸ்டடி வெறும் 15 கோடியை தான் வசூலித்திருந்தது.

அதேபோல் விஜய்யின் முந்தைய பட பிசினஸை பார்க்கும்போது லியோ 600 கோடி தாண்டியை வசூலித்துள்ளது. ஆனாலும் வெங்கட் பிரபு இயக்குனர் என்பதால் கோட் பிசினஸில் மந்தம் ஏற்பட்டுள்ளது. ஆக மொத்தம் அரசியல் பணிக்கு செல்ல இருக்கும் விஜய் ஆர்வம் இல்லாமல் தான் நடிக்கிறாரோ என்ற கேள்வியும் இதன் மூலம் எழுந்துள்ளது.

விஜய்யால் டல்லடிக்கிறதா கோட் வியாபாரம்.?

Trending News