வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தந்திரமாய் செயல்படும் வெங்கட் பிரபு, விஜய்.. முழு பூசணிக்காய் சோற்றில் மறைக்க போடும் திட்டம்

விஜய்யின் லியோ படத்திற்குப் பிறகு அவருடைய 68 ஆவது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிட்டு இருந்தார். அத்துடன் இப்படத்தை தயாரிப்பது ஏஜிஎஸ் நிறுவனம் என்றும் இப்படத்திற்கு இசையமைப்பது யுவன் சங்கர் ராஜா போன்ற அப்டேட்டுகளை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் விஜய்யின் ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்து வெங்கட் பிரபு படம் எப்படி இருக்கும் கஸ்டடி படம் மாதிரி அமைந்து விடக்கூடாது. அதற்கு பதிலாக அஜித் மற்றும் சிம்புக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின மாதிரி விஜய்க்கு ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

Also read: வெங்கட் பிரபுவை அலட்சியப்படுத்திய டாப் ஹீரோ.. கடுப்பில் விஜய்யை வைத்து பதிலடி கொடுக்கும் தளபதி 68

அடுத்ததாக இப்படத்திற்கான பட பூஜை ஜூன் 22 வைப்பதற்கான தேதியை குறி வைத்து இருக்கிறார்கள். ஏனென்றால் அன்றுதான் இவருடைய பிறந்தநாள் என்பதால் அன்றைக்கு பட பூஜையை சிறப்பாக ஆரம்பித்து விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதனால் இந்த தேதிக்கு முன் லியோ படத்தையும் முடிக்க வேண்டும் என்று அதிலே மும்பரமாக வேலை பார்த்து வருகிறார்கள்.

மேலும் லியோ படத்தை ஜூன் 15 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அடுத்ததாக தளபதி 68 படத்திற்கான பல விஷயங்களை வெங்கட் பிரபு மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து பிளான் பண்ணி வருகிறார்கள். அதாவது தளபதி 68 பட பூஜையே மிகவும் ரகசியமாக வைக்க வேண்டும் என்பதுதான்.

Also read: 234 தொகுதிகளையும் அவர்களை சந்திக்க போகும் விஜய்.. அரசியல் அஸ்திவாரம் பயங்கரமா இருக்கு

இதனை அடுத்து இது சம்பந்தமான எந்த ஒரு செய்தியும் வெளியே போகக்கூடாது மற்றும் பட பூஜை சம்பந்தப்பட்ட எந்த போட்டோ சூட்டுகள் பப்ளிசீட் பண்ண வேண்டாம் என்று தளபதி 68 பட குழுவினர் முடிவெடுத்து இருக்கிறார்கள். அதற்கு காரணம் இப்படத்தின் காரசாரமான விஷயங்கள் வெளிவந்தால் லியோ படத்தின் பிரமோஷன் அடிபட்டு விடும் என்பதற்காக.

லியோ படத்தை மறந்து விட்டு தளபதி 68 கொண்டாட ஆரம்பித்து விடுவார்கள். அதனால் இப்போதைக்கு கமுக்கமாகவே இப்படத்தின் பட பூஜையை முடித்து விடலாம் என்று தந்திரமாக காய் நகர்த்தி வருகிறார்கள். அதற்கேற்ற மாதிரி விஜய் என்ன சொன்னாலும் வெங்கட் பிரபு தலையை ஆட்டிக்கொண்டு ஓகே ஓகே என்று சொல்லி வருகிறார். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை அவருக்கு காரியம் நடக்கணும்.

Also read: விஜய்யையே மெர்சலாக்கிய 4 நடிகர்கள்.. விழுந்து விழுந்து சிரிக்க வைத்த கிங்ஸ்லி

Trending News