Venkat Prabhu: இன்று வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகி இருக்கும் கோட் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. என்டர்டைன்மெண்ட் படமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்திற்கு ஒருபுறம் வரவேற்பு கிடைத்தாலும் மற்றொருபுறம் ட்ரோல் கன்டென்ட் ஆக மாறி இருக்கிறது.
இதற்கு காரணம் பல படங்களின் காட்சிகளை எடுத்து ஒரு படமாக வெங்கட் பிரபு உருட்டி இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஒரு சின்ன காட்சிக்கு கூட மிகப் பெரிய நடிகர்களை வெங்கட் பிரபு பயன்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் கோட் படத்தின் கதையை எஸ் ஏ சந்திரசேகர் படத்தின் கதையிலிருந்து சுட்டதாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
பொதுவாக அட்லீ படங்கள் தான் மற்ற படங்களில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக விமர்சனங்கள் வரும். விஜய்யின் கோட் படத்திற்கு வெங்கட் பிரபுவால் இந்த நிலைமை இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதாவது கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் எஸ்ஏசி இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு ராஜதுரை என்ற படம் வெளியானது.
எஸ்.ஏ சந்திரசேகரின் படத்தை காப்பியடித்த வெங்கட் பிரபு
இந்த படத்தில் வில்லன் ஆனந்த்ராஜ் விஜயகாந்தை பழிவாங்க வேண்டும் என்பதற்காக சிறுவயதிலேயே அவரின் மகனை கடத்தி வளர்த்து வருவார். பின் அப்பா உடனே மகனை மோத விட்டு அதில் ஆனந்தராஜ் குளிர் காய்வார். அதே பார்முலாவை தான் வெங்கட் பிரபு பயன்படுத்தி இருக்கிறார்.
இதில் தந்தையான காந்தி தனது மகன் ஜீவாவை சிறுவயதிலேயே தொலைத்து விடுகிறார். அப்போது வில்லன் மோகன் அவரை கடத்திச் சென்று காந்திக்கு எதிராகவே வளர்கிறார். ஏன் விஜய்யின் பையனை கடத்தினார், எதற்கு பழி வாங்க துடிக்கிறார் என்பது பிளாஷ்பேக் காட்சிகளில் வருகிறது.
இதனால் கோட் படத்தை பார்த்த ரசிகர்கள் அப்படியே கேப்டனின் ராஜதுரை பார்த்தது போல் இருப்பதாக விமர்சித்து வருகிறார்கள். மேலும் விஜயகாந்த்தும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோட் படம் வென்றதா?
- வெங்கட் பிரபு கோட்டை விட்ட இடங்கள்
- கோட் படம் பார்த்தவங்க இந்த விஷயத்தை நோட் பண்ணிங்களா?
- விஜய்யின் கோட் தரிசனம் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்