திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

50 லட்சத்தை ஆட்டைய போட்டுக்கிட்டு ஓவராக பேசும் வெங்கட் பிரபு.. இதுக்கெல்லாம் காரணம் GOAT படம் தான்

Venkat Prabhu who rolled 50 lakhs: பொதுவாக வெங்கட் பிரபு இயக்கக்கூடிய படங்கள் சீரியஸாக பார்க்கும் அளவிற்கு ஒரு தனித்துவமான கதை இருக்கும் என்று சொல்ல முடியாது. போற போக்குல ஒரு படத்தை பண்ணக்கூடிய இயக்குனர் தான் வெங்கட் பிரபு. ஆனாலும் இந்த ட்ரிக்ஸ் பல படங்களில் இவருக்கு வெற்றியை கொடுத்து இருக்கிறது. முக்கியமாக மாநாடு படம் சிம்புக்கும் இவருக்கும் ஒரு மைல் கல் படமாக அமைந்திருக்கிறது.

அதன் மூலம் தற்போது விஜய்யை வைத்து GOAT படத்தை எடுத்து வருகிறார். இவர்களின் காம்போவில் வரக்கூடிய படம் எந்த மாதிரியாக இருக்கப் போகிறது என்ற ரசிகர்கள் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்கள். இருந்தாலும் அஜித்துக்கு மங்காத்தா, சிம்புக்கு மாநாடு போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் விஜய்க்கும் ஒரு வெற்றியை கொடுப்பார் என்ற நம்பிக்கை வெங்கட் பிரபு மீது வைத்து வருகிறார்கள்.

இதனை தொடர்ந்து வெங்கட் பிரபுவின் நண்பர் ஒருவர் ” நண்பன் ஒருவன் வந்த பிறகு” என்ற படத்தை எடுத்து வருகிறார். இப்படத்தை “வெங்கட் பிரபு பரிசு” என்று போட்டு பிசினஸ் பண்ணி கொண்டார்கள். ஆனால் இந்த ஒரு ராயல்ட்டியை வெங்கட் பிரபு கொடுத்ததற்காக 50லட்சம் ரூபாயை தயாரிப்பாளரிடம் டீல் பேசியிருக்கிறார். அவர்களும் வெங்கட் பிரபு கேட்ட மாதிரி தருகிறோம் என்று ஒத்துக் கொண்டார்கள்.

Also read: கேப்டனை கௌரவிக்கும் தளபதி.. வெங்கட் பிரபு செய்யும் தரமான சம்பவம்

ஆனால் இதற்கு இடையில் மாவீரன் தயாரிப்பாளர் மூலம் வெங்கட் பிரபு ஒரு படம் எடுப்பதாக இருந்தது. அதற்காக வெங்கட் பிரபு அந்த தயாரிப்பாளரிடம் 50 லட்சம் ரூபாயை அட்வான்ஸ் தொகையாக வாங்கி இருக்கிறார். ஆனால் சொன்னதோடு சரி வெங்கட் பிரபு அடுத்து எந்த ஒரு பேச்சையும் கொடுப்பதாக தெரியவில்லை. அத்துடன் தற்போது கோட் படத்தில் ரொம்பவே பிஸியாகி விட்டதால் இவரை பார்ப்பது கூட கடினம் ஆகிவிட்டது.

இதனால் மாவீரன் படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் பிரபுவிடம், நீங்கள் கோட் படத்தை முடித்துவிட்டு வருவதற்கு ரொம்பவே டைம் ஆகும். அதனால் என்னிடம் இருந்து வாங்கிய 50 லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார். அதற்கு வெங்கட் பிரபு தயாரிப்பாளரிடம் வாங்கிய 50 லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு சரியாக பதில் சொல்லாமல் அலைக்கழிக்க விட்டுவிட்டார்.

பிறகு அந்த தயாரிப்பாளர் கரராக வெங்கட் பிரபுவிடம் நான் கொடுத்த பணம் எனக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் வெங்கட் பிரபு, நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தின் தயாரிப்பாளர் எனக்கு 50 லட்சம் ரூபாய் தர வேண்டும். அதனால் நீங்கள் அங்கு போய் என் பெயரை சொல்லி வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். இப்படி ஓவர் மிதப்பில் வெங்கட் பிரபு ஆடுவதற்கு காரணம் விஜய்யின் கோட் படத்தை எடுக்கும் திமிரில் தான் என்று பேசப்படுகிறது.

Also read: விஜய்யிடம் செம திட்டு வாங்கிய வெங்கட் பிரபு.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனே!

Trending News