சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பயந்து நடுங்கிய வெற்றி இயக்குனர்.. கடைசி வரை கை விடாமல் காப்பாற்றி அஜித்

அஜித் குமார் ஆரம்பத்திலிருந்தே கஷ்டப்பட்டு திரைத்துறையில் தனக்கென ஒரு நீங்காத இடம் பிடித்துள்ளார். ஆரம்பத்தில், நாடகம் குழந்தை நட்சத்திரம் என கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

தனது ஹேண்ட்சம் லூக்கினாலும், ஸ்டைலான நடிப்பினாலும் பாலிவுட்யே மிரட்டி வருகிறார். இவர் முதன்முதலில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்த திரைப்படம் வாலி. அதில் இரட்டை வேடத்தில் ஒன்றில் நல்லவராகவும், மற்றொன்றில் கெட்டவராகவும் நடித்திருப்பார்.

இந்தப் படத்தையே அஜித்தின் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அடுத்தும் ஒன்னு ரெண்டு நெகட்டிவ் ரோல்களில் நடித்து மிரட்டியுள்ளார். அதன்பின் நெகட்டிவ் ரோலிற்கு சில காலம் முழுக்கு போட்ட நிலையில், அவரது 50வது படத்திலும் அதே ரோலில் நடிக்க வாய்ப்பு இவருக்கு வந்தது.

அந்த படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு. இவருக்காக தான் அவர் அந்த கதையை தயார் செய்து உள்ளார். அஜித் இந்தக்கதைக்கு விருப்பம் தெரிவிப்பாரா என்று ஒருவித தடுமாற்றத்துடன் கதையை சொல்லியிருக்கிறார். கதையை முழுவதுமாக கேட்ட அஜித் நன்றாக இருக்கிறது நாம் பண்ணலாம் என்று ஒத்துக் கொண்டுள்ளார்.

அந்தப் படம்தான் மங்காத்தா, அதில் முழுநேர வில்லனாக நடித்து மிரட்டினார் அஜித். இந்தப் படத்தில் அவரின் கேரக்டரை நினைத்து பயந்த வெங்கட் பிரபுவிற்கு, எல்லா ஒத்துழைப்பும் கொடுத்து, கடைசிவரை ஒரு தூணாக நின்று படத்தை முடித்து கொடுத்திருக்கிறார் அஜித்.

இந்தப் படம் ஒரு பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இந்த படத்தின் ஒரு காட்சியில் அஜித்தை, நடிகர் வைபவ் அடிப்பது போன்று காட்சி வரும். அந்த காட்சியை எடுக்க கொஞ்சம் மன கஷ்டமாக இருந்தது என்று சமீபத்தில் வெங்கட்பிரபு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Trending News