எப்பொழுதுமே சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாமல் திரைக்கதையை விறுவிறுப்பாக கொண்டு போகும் வெங்கட் பிரபு கோட் படத்திலும் அதைத்தான் செய்திருக்கிறார். இன்டர்வல் வரை கதை என்ன என்பது யாராலையும் கணிக்க முடியவில்லை. அதுதான் படத்திற்கு பிளஸ் பாயிண்ட்.
முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் கதை இரண்டாம் பாதியில் சற்று டல் அடிக்கிறது.படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தும் அவர்களுக்கு ஸ்கோர் பண்ணும் வாய்ப்பு அவ்வளவாக இல்லை. லைலா , யோகி பாபு போன்றவர்களுக்கு அதிக காட்சிகள் இல்லை.
ஆரம்பத்திலேயே இளம் வயது விஜய் போல் வரும் விஜயகாந்த்திடம் விஜய் யோட நடிப்பு தெரிகிறது.. இதை வைத்து விஜய் தான் மாறுவேடத்தில் வருகிறார் என்பது எளிதாக கண்டுபிடிக்கும் விஷயமாக இருக்கிறது. இப்படி ஏ ஐ டெக்னாலஜியில் சிறிது இடத்தில் கோட்டை விட்டு இருக்கிறார் வெங்கட் பிரபு.
புதுசா பண்ணனும்னு கோட் வைத்து செய்த பிரியாணி
சில கதாபாத்திரங்களுக்காக கதை எழுதினாரா அல்லது இந்த கதாபாத்திரத்தை புதிதாய் படத்தில் காண்பிக்கலாம் என்று சிலவிஷயங்களை டெஸ்ட் செய்து இருக்கிறார். அதிலும் இரண்டாம் விண்ண தொடங்கி இருக்கும் மோகனின் வில்லத்தனம் சுத்தமாய் எடுபடவில்லை.
விஜய்க்கு அடுத்தபடியாக பிரசாந்த் வரும் காட்சிகள் படத்திற்கு கை கொடுத்திருக்கிறது. வில்லன் மோகனை ஆரம்பத்தில் ஒரு பெரிய தீவிரவாதி போன்று காட்டுகின்றனர். ஆனால் அவர் விஜய்யை பழிவாங்க வரும் காட்சிகளில் கோட்டை விடுகிறார். விஜயகாந்த் மோகன், லைலா, ஏ ஐ டெக்னாலஜி கோட் படத்திற்கு கை கொடுக்கவில்லை
- வொர்க் அவுட் ஆனதா விஜய், வெங்கட் பிரபுவின் மேஜிக்.?
- டிக்கெட் 2000 ரூபாயா.!
- GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சாய்ஸ் விஜய் இல்லை