வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

வீணா வாய் கொடுத்து புண்ணாக்கிய வெங்கடேஷ் பட்.. விஜய் டிவி CWC 5 ரங்கராஜை வம்புக்கு இழுத்து போட்ட ட்வீட்

Vijay Tv: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதுவே இந்த ஷோவை ஐந்து சீசன்கள் வரை கொண்டு வந்திருக்கிறது.

ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சி ஒரு சர்ச்சையாக மாறி இருக்கிறது. புது சீசன் ஆரம்பித்த நிலையில் செஃப் வெங்கடேஷ் பட் இதில் இடம்பெறவில்லை என ஏற்கனவே அறிவித்திருந்தார்.

அதை அடுத்து சன் டிவியில் அவர் வரப்போகும் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி உள்ளது. இது சும்மா இருந்த வாய்க்கு அவல் கிடைத்தது போல் ஆகிவிட்டது.

அப்படி என்னதான் உங்களுக்குள் பிரச்சனை என ஒவ்வொருவரும் வெங்கடேஷ் வாயை கிளற ஆரம்பித்து விட்டார்கள். ஏற்கனவே குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் முதல் எபிசோட் கலவையான விமர்சனங்களை பெற்றது.

சர்ச்சையான குக் வித் கோமாளி

அதாவது அந்த நிகழ்ச்சி தொடங்கிய போது யாரும் வெங்கடேஷ் பட் இல்லை என்பதை வாய் வார்த்தையாக கூட பதிவு செய்யவில்லை. ஒரு வேலை இது சேனலின் கண்டிஷனாக கூட இருக்கலாம்.

ஆனால் சோசியல் மீடியா பக்கத்தில் கூட யாரும் இது குறித்து பேசவில்லை. இதை ரசிகர்களும் கேள்வியாக கேட்டு வந்தனர். அதற்கு பதிலளித்த அவர் உண்மை வெல்லும் என குறிப்பிட்டு இருந்தார்.

venkatesh bhat
venkatesh bhat

மேலும் சன் டிவியில் வரப்போகும் டாப் குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் ஆதரவு வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதற்கு சிலர் வாழ்த்து கூறியிருந்தாலும் பல ஆடியன்ஸ் நெகட்டிவ் விமர்சனங்களை தான் கொடுக்கின்றனர்.

விஜய் டிவியை விட சன் டிவி அதிக சம்பளம் கொடுப்பதால் தான் இவர் விலகி விட்டார். அதேபோல் மாதம்பட்டி ரங்கராஜ் இப்போது ஃபேமஸாக இருக்கிறார்.

அந்த பொறாமையில் கூட இவர் விஜய் டிவியுடன் ஏதோ பிரச்சனை என்பது போல் பேசி இருக்கலாம். எப்படி இருந்தாலும் விஜய் டிவி டிஆர்பியை இறக்க முடியாது என சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆக மொத்தம் வெங்கடேஷ் பட் திடீரென போட்டி சேனலுக்கு தாவியது நெகட்டிவாக தான் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தேவையில்லாமல் வாயை கொடுத்து இவர் புண்ணாக்கி கொண்டுள்ளார்.

Trending News