Vijay Tv: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் மகாநதி. இந்தத் தொடர் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வருவதால் டிஆர்பியில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. இந்த சூழலில் காவிரி இப்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இதை கணவர் விஜய் இடம் சொல்ல வேண்டும் என்று ஆசையாக கோயிலுக்கு வந்திருக்கிறார். மேலும் போன் செய்து விஜயை கோயிலுக்கு வருமாறு கூறியிருக்கிறார்.
ஆனால் இந்த சந்தோஷம் சிறிது நேரம் தான் நீடிக்கிறது. ஏனென்றால் வெண்ணிலாவுக்கு நினைவு திரும்பிய நிலையில் விஜய் தனக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாடி வருகிறார். விஜய் தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது, என்னுடைய மனைவி காவிரி தான் என்று கூறுகிறார்.
மகாநதி சீரியலில் வெண்ணிலாவுக்கு நினைவு திரும்பியது
இதனால் ரூமுக்கு சென்ற அதிக மாத்திரையை உட்கொள்கிறார் காவேரி. தற்போது விஜய் தடுத்து நிறுத்தினாலும் ஏதாவது அசம்பாவிதம் நடந்துவிடும் என்று மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்.
ஒருபுறம் ராகினி, விஜய் காவேரியை பிரித்ததை எண்ணி சந்தோஷப்படுகிறார். மேலும் காரில் செல்லும் வெண்ணிலா, நீ மோதிரம் மாத்தி என்ன கல்யாணம் பண்ணிட்டா என்று விஜய்யை நச்சரித்து வருகிறார். அவர் எவ்வளவோ எடுத்து சொல்லியும் வெண்ணிலா விட்டுக் கொடுத்த பாடு இல்லை.
காரின் கதவை திறந்து கீழே குதிக்கவும் முற்படுகிறார். ஒரு வழியாக காப்பாற்றி மருத்துவமனைக்கு விஜய் அழைத்து சென்று விட்டார். கணவனுக்காக கோயிலிலேயே காத்திருக்கும் காவேரி சிறுது நேரம் கழித்துவிட்டு ஏக்கத்துடனே வீடு திரும்புகிறார்.