வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஆபீஸர் ஆக மாறிய சமையல் அம்மா.. சமாதான படுத்துவது போல் கட்டிப்பிடித்த பாரதி

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் இல்லாத சதி வேலைகளை எல்லாம் செய்து பாரதியை தன்னுடைய மனைவியுடன் வாழ விடாமல் வில்லி வெண்பா தன் கைவசம் வைத்திருக்கிறார். இருப்பினும் அவளால் பாரதியைத் திருமணம் மட்டும் செய்து கொள்ள முடியவில்லை.

தற்சமயம் அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் வெண்பாவின் அம்மா, ‘பாரதி உன்னை நிச்சயம் திருமணம் செய்து கொள்ள மாட்டான் நீ, நான் சொல்லும் நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகி விடு’ என வலியுறுத்துகிறார்.

இதனால் பாரதியிடம் வெண்பா என்னை திருமணம் செய்துகொள் என கெஞ்சி கிளரும் போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வெண்பாவை பாரதி அடித்து போகிகிறான். இதன் பிறகு வெண்பா, பாரதி இருவரும் ஒருவரோடொருவர் பேசாமல் இருந்ததால் வெண்பா தற்போது வழியக்கபோய் பாரதியை மருத்துவமனையில் சந்தித்து தன்னுடன் மீண்டும் சகஜமாக பேசும்படி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறாள்.

அதன் பிறகு வெண்பாவை கட்டிப்பிடித்து சமாதானப்படுத்திய பாரதி, தற்போது சௌந்தர்யாவின் நண்பன் விக்ரம் புதிதாக துவங்கவிருக்கும் மருத்துவமனைக்கு முதன்மை மருத்துவராக பாரதி இருக்கப் போவதால் அதற்கான இன்விடேஷனை வெண்பாவிற்கு கொடுத்து, அங்கு வர அழைக்கிறான்.

இதில் சிறப்பு என்னவென்றால் அந்த மருத்துவமனைக்கு அட்மின் ஆபீஸராக கண்ணம்மா நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே துவக்க விழா கொண்டாட்டத்தில் பாரதிக்கு இது ஷாக்கை ஏற்படுத்தி இருக்கிறது.

இனி வரும் நாட்களில் கண்ணம்மா சமையலம்மாவாக இல்லாமல், மருத்துவமனையில் முழு நேரமும் பாரதி மாமாவை கரெக்ட் பண்ணும் வேலையை பார்க்கப் போகிறாள். ஆகையால் இனி பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதிக்கும் கண்ணமாவிற்கும் இடயே நடக்கும் சிறுசிறு கலாட்டா மற்றும் அதனால் அவர்கள் காதல் மீண்டும் துளிரை போவதை பார்க்கப்போகிறோம்.

Trending News