Goundamani: கோமுட்டி தலையா, வட்ரூபி மண்டையா, கொண்ட போட்டவர்களுக்கு பெட்ரோமாக்ஸ் லைட் கிடையாது, இதுக்கு தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகுராஜா இருக்கணும் இப்படி பட்ட சில வசனங்களை கேட்கும் போது உங்களை அறியாமல் ஒரு சிரிப்பு வரும். அந்த சிரிப்புக்கு சொந்தக்காரரான கவுண்டமணிக்கு இன்று 86 ஆவது பிறந்தநாள்.
கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலமாக தமிழ் சினிமா ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. நகைச்சுவை மன்னனாக இருந்த இவர் வில்லத்தனத்தில் மிரட்டுவார் என சொன்னால் யாராவது நம்புவீர்களா. என்பதுகளின் காலகட்டத்தில் அதையும் சிறப்பாக செய்திருக்கிறார் நகைச்சுவை மன்னன். கவுண்டமணி அப்படி கவுண்டமணி வில்லத்தனத்தில் மிரட்டிய ஆறு படங்களை பற்றி பார்க்கலாம்.
இப்பவும் மறக்க முடியாத 6 கதாபாத்திரங்கள்
கிழக்கே போகும் ரயில்: ராதிகா மற்றும் சுதாகர் நடிப்பில் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிய படம் கிழக்கே போகும் ரயில். இந்த படம் ரிலீஸ் ஆன பொழுதில் கல்யாண வீடு என்றாலே பூவரசம்பு பூத்தாச்சு பாட்டுத்தான் மைக்கை கிழிக்கும். இந்த படத்தில் கவுண்டமணி ராதிகாவின் அக்கா கணவராக நடித்திருப்பார். மனைவி வீட்டில் இல்லாத போது ராதிகாவிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பதும், அதற்கு ராதிகா ஒத்துக் கொள்ளவில்லை என்றதும் அவருடைய வாழ்க்கையே அழிக்க நினைப்பதும் தான் இதில் கவுண்டமணியின் கேரக்டர்.
சுவர் இல்லாத சித்திரங்கள்: பாக்கியராஜ், சுதாகர், சுமதி இணைந்து நடித்த படம் தான் சுவர் இல்லாத சித்திரங்கள். இந்த படம் தான் பாக்கியராஜ் முதல் முதலில் இயக்கிய படம். ரொம்பவும் வறுமையில் வாடும் குடும்பத்தை சேர்ந்த பெண்ணின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது இந்த படத்தின் கதை. இதில் கவுண்டமணிக்கு ரொம்ப நெகட்டிவான கேரக்டர் என்று சொல்ல முடியாது. இருந்தாலும் தன்னை விட பல மடங்கு வயது குறைவான ஹீரோயின் மீது ஆசைப்பட்டு, சமயம் கிடைக்கும் போதெல்லாம் வழிந்து பேசுவது போன்ற ஒரு முக சுழிப்பு தரும் கேரக்டர்.
ஆவாரம்பூ: வினித் மற்றும் நந்தினி நடிப்பில் 1992 ஆம் ஆண்டு ரிலீசான படம் ஆவாரம்பூ. இந்த படத்தில் கவுண்டமணி ஆசாரி என்னும் கேரக்டரில் நடித்திருப்பார். நந்தினி இடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்து பின்னர் அவளால் அவமானப்படுத்தப்பட்டு விடுவார் கவுண்டமணி. இதை மனதில் வைத்துக் கொண்டு மனநிலை சரியில்லாத வினித்தை அழைத்து அவனிடம் தவறான விஷயங்களை சொல்லி அவன் மனதை கெடுத்து, நந்தினி உடன் தவறாக பழக வைத்துவிடுவார்.
சூரியன்: சரத்குமார் நடித்த சூரியன் படத்தின் பெரிய வெற்றிக்கு காரணமே பன்னிக்குட்டி ராமசாமி கேரக்டரில் நடித்த கவுண்டமணி தான். டுபாக்கூர் அரசியல்வாதியாக அருந்து போன போன போனில் பில்டப் காட்டி பேசுவது, பூ மிதிக்கிற நோம்பி போன்ற காட்சிகள் வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கும். இருந்தாலும் தலைமறைவாக வாழும் சரத்குமாரை காட்டிக் கொடுக்க முயற்சி செய்யும் இடங்களில் படம் பார்ப்பவர்களிடம் பயங்கரமான வசைகளை வாங்கினார். நேருக்கு நேர் எதிரியான வில்லனாக இல்லை என்றாலும் அதற்கு சமமான டென்ஷனை படம் முழுக்க கொடுத்திருப்பார்.
ஞானப்பழம்: பாக்யராஜ் மற்றும் சுகன்யா இணைந்து நடித்த படம் ஞானப்பழம். இந்த படத்தில் கவுண்டமணி சுகன்யாவின் அண்ணனாக நடித்திருப்பார். தனக்கு விருப்பம் இல்லாமல் தங்கை சுகன்யா பாக்கியராஜ் திருமணம் செய்து கொண்ட பெண், கவுண்டமணி செய்யும் சில நெகட்டிவ் வேலைகள் உண்மையிலேயே படம் முழுக்க மிரட்டி இருக்கும்.
கிட்டத்தட்ட 30 வருடங்களாக தமிழ் சினிமாவில் நிலைத்து நின்று 320 படங்கள் நடித்த கவுண்டமணியின் சொத்து மதிப்பு 320 கோடி ஆகும்.