வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மறக்க முடியாத காக்கா ராதாகிருஷ்ணனின் 5 டாப் படங்கள்.. கமலை கண்கலங்க வைத்த மனுஷன்

மறைந்த நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் தன்னுடைய வாழ்நாளில் இதுவரை கிட்டத்தட்ட 600 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். மேடை கலைஞராக இருந்த இவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு நாடகத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கி கொடுத்தவர். குணச்சித்திர வேடங்களில் நடித்து கொண்டிருந்த இவர் பின்னர் காமெடி காட்சிகளிலும் நடித்தார்.

காதலுக்கு மரியாதை: 1997 ஆம் ஆண்டு இயக்குனர் ஃபாசில் இயக்கத்தில் வெளியான திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் காமெடி கேரக்டரில் நடித்திருந்தார். தாமு, சார்லி, விஜய்யுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கும்.

Also Read: எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா

மிடில் கிளாஸ் மாதவன்: இயக்குனர் டி. பி. கஜேந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மிடில் கிளாஸ் மாதவன். இந்த படத்தில் ஏற்கனவே வடிவேலு மற்றும் விவேக்கின் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்கும்படி இருக்கும். இதில் விவேக்கின் தாத்தாவாக வரும் காக்கா ராதாகிருஷ்ணன் அவருடைய பங்குக்கு சிறப்பாக நடித்திருப்பார்.

மாயி: சரத்குமார், மீனா நடித்த மாயி திரைப்படம் 2000 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம். வடிவேலு மற்றும் கோவை சரளா காமெடியில் காக்கா ராதாகிருஷ்ணனும் இணைந்து கலக்கி இருப்பார். வடிவேலுவுடன் நடித்த நகைச்சுவை காட்சிகளில் வடிவேலுவையே மிஞ்சி இருப்பார்.

வசூல்ராஜா எம்பிபிஎஸ்: இயக்குனர் சரண் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு கமல், பிரபு, சினேகா நடித்த படம் வசூல்ராஜா எம்பிபிஎஸ். இந்த படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் கிரேசி மோகனின் தந்தையாக நடித்திருப்பார். இரண்டு காட்சிகளில் வந்தாலும் மனதில் நின்று இருப்பார்.

Also Read: ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம்

உனக்காக எல்லாம் உனக்காக: இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் முழு நீள நகைச்சுவை திரைப்படமாக 1999 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் உனக்காக எல்லாம் உனக்காக. இதில் காக்கா ராதாகிருஷ்ணன் வினு சக்கரவர்த்தியின் அப்பாவாக நடித்திருப்பார். கவுண்டமணியின் காம்போவில் இவர் நடித்த காமெடி காட்சிகள் இன்றும் ரசிக்கும்படி இருக்கும்.

தேவர் மகன்: கமலஹாசன் எழுதி, தயாரித்து, நடித்த திரைப்படம் தேவர் மகன். இந்த படத்தில் சிவாஜியின் சகோதரராக காக்கா ராதாகிருஷ்ணன் நடித்திருப்பார். இதில் அவருக்கு சிவாஜியின் மீது தீராத பகை இருக்கும். முதன்முறையாக இவர் வில்லன் கேரக்டரில் நடித்திருப்பார். கிளைமாக்ஸ் காட்சியில் படம் பார்ப்பவர்களை அழ வைத்திருப்பார்.

Also Read: இரண்டரை கோடியை தூக்கி கொடுத்த உதயநிதி.. கட்சிக்கு நிதி வேண்டாம் என மெய்சிலிர்க்க வைத்த கமல்

Trending News