ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆன்ட்டி நடிகைக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த மூத்த காமெடி நடிகர்.. கேரவனுக்குள் நடந்த சம்பவம்

Adjustment Torture: வயது வித்தியாசம் இன்றி நடிகைகளை பார்த்து ஜொள்ளு விடுபவர்கள் இங்கு ஏராளம். அதிலும் ஹீரோக்கள், காமெடியன்கள், இயக்குனர்கள் என பலரும் நடிகைகளுக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்த செய்திகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கிறது.

அதில் பல நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் சம்பவங்களை வெளிப்படையாக போட்டு உடைத்து வருகின்றனர். அப்படித்தான் தற்போது அம்மா வேடங்களில் நடித்து வரும் நடிகை பிரகதி தனக்கு நடந்த ஒரு அனுபவத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் தமிழில் பாக்யராஜின் வீட்ல விசேஷங்க, விஜயகாந்தின் பெரிய மருது உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது சீரியல்களிலும் கவனம் செலுத்தி வரும் இவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் சீனியர் காமெடி நடிகர் ஒருவர் தனக்கு அந்தரங்க டார்ச்சர் கொடுத்ததை போட்டு உடைத்திருக்கிறார்.

Also read: சீரியலில் கதாநாயகி உடன் ஏற்பட்ட அந்தரங்க உறவு.. மனைவியை துரத்தி விட்டு கூத்தடிக்கும் கதாநாயகன்

டாப் ஒருவரின் படத்தில் இவர் நடித்துக் கொண்டிருந்தபோது காமெடி நடிகர் ஒருவர் இவரை தவறான நோக்கத்தில் அணுகியிருக்கிறார். அது மட்டுமின்றி பட்ட பகலில் தன்னுடைய ஆசைக்கு இணங்கும் படி மறைமுகமாக பிரகதியிடம் கேட்டு இருக்கிறார்.

இதனால் அதிர்ந்து போன அவர் சூட்டிங் முடியும் வரை பொறுமையாக இருந்திருக்கிறார். அதன் பிறகு அதன் நடிகரை கேரவனுக்கு வரவழைத்து லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விட்டாராம். நீங்கள் எப்படி என்னை இந்த மாதிரி கேட்கலாம் நான் உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா? இல்லை என்னுடைய உடல் மொழி உங்களை கேட்க தூண்டியதா? என சரமாரியாக கேள்வி கேட்டாராம்.

அதற்கு அந்த காமெடி நடிகர் இல்லை என்று கூறி இருக்கிறார். உடனே பிரகதி நீங்கள் செய்த வேலைக்கு உங்களை அந்த இடத்திலேயே வைத்து அசிங்கப்படுத்தி இருக்க முடியும். ஆனால் உங்கள் பெயர் கெட்டு விடக்கூடாது என்று அமைதியாக இருந்தேன் என்று கூறி அனுப்பி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வரும் நிலையில் யார் அந்த நடிகர் என்ற தேடலையும் ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.

Also read: ஓவர் நைட்டில் பிரபலமான நடிகை.. 4 பேருடன் வாழ்ந்த பின் திருமணத்திற்கு தலையாட்டிய 48 வயது ஆன்ட்டி

Trending News