வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஹீரோவாக்க உசுர கொடுத்து வேல செஞ்ச 5 அப்பாக்கள்.. மகனுக்காக குருவையே எதிர்த்த விக்ரம்

80, 90களில் முன்னணி ஹீரோக்களாக இருந்த ஒரு சில நடிகர்கள் தற்போது தங்களுடைய வாரிசுகளை ஹீரோவாக்க உயிரைக் கொடுத்து வேலை செய்து வருகின்றனர். ஆனால் அந்த வாரிசுகளோ தனக்கென்ன வந்தது என்பது போல் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய சொந்த உழைப்பால் மேலே வந்த இந்த ஹீரோக்கள் தங்களுடைய வாரிசுகள் மட்டும் எந்த கஷ்டமும் இல்லாமல் முன்னேறி விட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். இதுவே அவர்கள் தோற்றுப் போக ஒரு மிக முக்கிய காரணம்.

கௌதம் கார்த்திக்: அந்த காலத்தில் நவரச நாயகன் கார்த்திக்குக்கு என்று பெண்கள் ரசிகர்கள் கூட்டம் அதிகம். கமல், ரஜினிகாந்த்தைவிட இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம் உண்டு. தன்னைப் போல தன் மகன் கௌதம் கார்த்திக்கும் ஒரு மிகப்பெரிய ஹீரோ ஆக வேண்டும் என்று கார்த்திக் பல இடங்களிலும் சிபாரிசு செய்து பார்த்தார். ஆனால் கௌதம் கார்த்திக்குக்கு ஒரு வெற்றி படம் கூட அமையவில்லை.

Also Read: நல்ல அழகு இருந்தும் ஜொலிக்க முடியாமல் போன 5 நடிகர்கள்.. காசு வேண்டாம் வாய்ப்பு தாங்க என கதறிய ஷ்யாம்

துருவ் விக்ரம்: சீயான் விக்ரம் தமிழ் சினிமாவின் ரொம்பவும் கஷ்டப்பட்டு முன்னேறிய நடிகர். இவர் தன்னுடைய மகன் துருவ் விக்ரமை எப்படியாவது ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என்று இன்று வரை முயற்சி செய்து வருகிறார். தன்னைப் போலவே தன்னுடைய மகனுக்கு நல்ல ரீச் கிடைக்க வேண்டும் என்று முதல் படமே அவருடைய குருவான பாலாவை இயக்க வைத்தார். அந்தப் படத்தில் விக்ரமுக்கு திருப்தி இல்லாததால் தன்னுடைய குருவான பாலாவையே எதிர்த்து அதே கதையை வேறொரு இயக்குனரிடம் கொடுத்து படம் பண்ணினார். ஆனால் அந்தப் படத்திற்கு பிறகு துருவுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை.

விக்ரம் பிரபு: நடிகர் திலகத்தின் வாரிசாக சினிமாவில் ஜெயித்து காட்டியவர் இளைய திலகம் பிரபு. ஆனால் மூன்றாம் தலைமுறையாக வந்த விக்ரம் பிரபுவால் அதுபோன்று நிலைத்து நிற்க முடியவில்லை. அவருடைய முதல் படமான கும்கி மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தன் அப்பாவை போலவே சினிமாவில் ஜெயித்து விடுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

Also Read: ரெண்டு பொண்டாட்டி பத்தாது என காதலில் விழுந்த கார்த்திக்.. நம்பி ஏமாந்தால் தற்கொலை முயற்சியில் 80-களின் கனவுக்கன்னி

சிபி சத்யராஜ்: சத்யராஜ் ஆரம்ப காலங்களில் வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து முன்னணி ஹீரோ ஆனார். அவருடைய மகன் சினிமாவிற்கு வந்த பொழுதில் அப்படியே சத்யராஜை போல் இருப்பதால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பிறகு சிபி சத்யராஜுக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை. சத்யராஜ் மகனுக்காக தயாரிப்பாளராக கூட மாறினார். ஆனால் எதுவுமே செட் ஆகவில்லை.

அதர்வா முரளி: மற்ற ஹீரோக்களைப் போல ரொம்பவும் கஷ்டப்படாமல், சென்டிமென்ட் காட்சிகளாலே ரசிகர்களை கவர்ந்தவர் தான் நடிகர் முரளி. ஆரம்ப காலங்களில் இவர் மீது எதிர்மறையான விமர்சனங்கள் நிறைய வந்தன. அதையெல்லாம் தாண்டி குடும்பங்கள் கொண்டாடும் கதாநாயகனாக இருந்தார். இவர் தன் மகனை எப்படியாவது ஹீரோ ஆக்கிவிட வேண்டும் என்று நண்பர்களிடம் கூட்டி சென்று படம் எடுக்கும்படி சொன்னார். ஆனால் கதாநாயகனுக்கான அத்தனை அம்சங்கள் இருந்தாலும் அதர்வா முரளி சினிமாவில் ஜொலிக்க முடியாமல் போனது.

Also Read: சம்பளமே வேண்டாம் நடிக்கிறேன் அதர்வா ஒரேபோடு.! யாருக்கு வரும் இந்த மனசு.!

Trending News