வெற்றிமாறன் இயக்கத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் விடுதலை திரைப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் நேற்று வெளியானது. எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை மையமாக வைத்து உருவான இப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. அதன்படி முதல் பாகம் இந்த மாத இறுதியில் வெளியாகிறது.
சூரி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ஹிட்டான நிலையில் தற்போது அடுத்தடுத்த பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Also read: தன் இனத்தை காப்பாற்ற போராடும் விஜய் சேதுபதி வாத்தியார்.. வெற்றிமாறனின் விடுதலை பார்ட் ஒன் ட்ரெய்லர்.
அந்த வகையில் நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்கள். அதில் வெற்றி மாறன் பேசும் பொழுது காட்டுமல்லி பாடல் எப்படி உருவானது என்பதை பற்றி சுவாரஸ்யத்துடன் தெரிவித்து இருந்தார்.
அவர் கூறியிருப்பதாவது, எனக்குள் இருந்த உணர்வுகளை நான் வார்த்தையாக வெளிப்படுத்தினேன். அதை ராஜா சார் அப்படியே உள்வாங்கி ஒலியாக்கி மீண்டும் என்னை உணர வைத்தார். அது எனக்கு புது அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளார். மேலும் இளையராஜாவுடன் பணியாற்றியதை என்னால் மறக்க முடியாது என்றும் கூறினார்.
Also read: 8 வருஷத்தில் விஜய் சேதுபதியே பிரமித்து போன விஷயம்.. மனுஷன் திறந்த புத்தகமா இருக்காரு!.
அதை தொடர்ந்து பேசிய இளையராஜா விடுதலை திரைப்படம் இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்றும் திரையுலகம் சந்திக்காத படம் என்றும் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் இதுவரை நான் ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறேன். அதில் வெற்றி மாறன் ரொம்பவும் வித்தியாசமானவர். அற்புதமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் என்று பாராட்டினார்.
மேலும் தான் இசையமைத்த பாடல்களில் விடுதலை படத்தின் இசை ரசிகர்களுக்கு புது உணர்வை கொடுக்கும் என்றும் கூறினார். இதுவே பெரும் ஆர்வத்தை தூண்டி உள்ள நிலையில் ட்ரெய்லரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிலும் பல காட்சிகளில் சூரி ரிஸ்க் எடுத்து நடித்திருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. அந்த வகையில் விடுதலை நிச்சயம் ரசிகர்களை கொண்டாட வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
Also read: மருத்துவமனையில் இசையமைத்த இளையராஜா.. 38 வருடங்களுக்கு பின்னும் மறக்க முடியாத பாடல்