இயக்குனர் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் அனைத்தும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் 2018 ஆம் ஆண்டு இவர்களது கூட்டணியில் வெளியான வடசென்னை படத்திற்கு கிடைத்த வெற்றியினால் அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலை தொடங்கி விட்டது.
இன்னிலையில் வடசென்னை 2 படம் பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறது. இந்தப் படத்திற்கு வடசென்னை தமிழ் சங்கம் தலைவர் பெரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். படப்பிடிப்பு துவங்கினால் அதை நிறுத்தவும் தயாராக இருக்கின்றனர்.
ஏனென்றால் இந்தப் இப்படத்திற்கு வடசென்னை 2 என தலைப்பிட்டு, அதில் போக்குவரத்து நெரிசலில், குடிசை வீடு, அழுக்கு ரோடு, குற்றங்கள் செய்கின்ற மனிதர்கள்தான் இவர்கள் என தவறாக சித்தரித்து காண்பிக்கின்றனர்.
வட சென்னையில் இருக்கும் இளைஞர்கள் படித்து முன்னேறி பெரிய வேலைகளிலும், ஐடி கம்பெனிகளிலும் வேலை பார்க்கின்றார்கள். ஆனால் வடசென்னை படத்தில் படு லோக்கல் ஆகவே இளைஞர்களை காண்பிக்கின்றனர்.
இப்படி வடசென்னை என்று டைட்டில் வைத்துக் கொண்டு எங்களை தவறாக காண்பித்துக் கொண்டிருக்கும் வெற்றிமாறன் படத்தின் கதையை மாற்ற வேண்டும். அப்படி இல்லை என்றால் டைட்டிலை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் இந்த படத்திற்கு எதிராக கடும் போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
இவர் மட்டுமல்லாமல் தியேட்டர் வைத்திருக்கும் திமுக எம்எல்ஏ ட்ரீம் தியேட்டர் உரிமையாளரும் வடசென்னை 2 படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஒருவேளை பிரச்சனை செய்து வெற்றிமாறன் படத்தை எடுத்து முடித்தாலும் திரையரங்கில் வெளிவர விடமாட்டேன் என்றும் எச்சரித்துள்ளார். இப்படி வடசென்னை 2 படம் பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டி இருக்கிறது.