ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விடுதலை படத்தில் நடிக்க இருந்த 2 நடிகர்கள்.. வேறு வழி இல்லாமல் விஜய்சேதுபதிக்கு போன வாய்ப்பு

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த திரைப்படம் தான் விடுதலை. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கூட சமீபத்தில் நடைபெற்றது. விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகிறது. இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

விடுதலை படத்தின் வேலைகள் எல்லாம் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது. ஐந்து வருடங்களாக இந்த படப்பிடிப்பு வேலைகள் ஜவ்வாக இழுத்து இப்பொழுது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

Also Read:பல வருடங்களாக ஏமாற்றிய வெற்றிமாறன்.. எல்லாத்தையும் இழந்து நொந்து நூடுல்ஸ் ஆன சூரி

முக்கியமான ரோல் என்றால் போலீசை எதிர்ப்பும் சதிகார வில்லன் கேரக்டர் தான் விஜய் சேதுபதிக்கு. வெற்றிமாறனை பொறுத்த வரைக்கும் எப்போதுமே ஒரு படத்தை ரெடி பண்ணும் போதே பக்காவாக கேரக்டர்கள் முதற்கொண்டு மனதில் வைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிப்பதற்காக அவர் முதலில் வேறு இரண்டு நடிகர்களை தான் அணுகி இருக்கிறார்.

வெற்றிமாறனின் மிகப்பெரிய ஹிட் படமான பொல்லாதவன் திரைப்படத்தில் வில்லனாக மிரட்டிய கிஷோருக்கு தான் முதலில் இந்த கேரக்டர் அமைந்து இருக்கிறது. கிஷோர் படப்பிடிப்புக்காக காத்திருந்து ஒரு கட்டத்தில் அவர் நடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருந்ததால் அந்த வேலைகளை ஆரம்பித்து விட்டார்.

Also Read: விடுதலை ரிலீஸுக்கு முன்பே வெளிவந்த சூரியின் அடுத்த பட டைட்டில் போஸ்டர்.. காமெடிக்கு இனி வாய்ப்பே இல்லையாம்!

அதன் பின்னர் வெற்றிமாறன், இயக்குனர் இமயம் பாரதிராஜாவை இந்த படத்தில் நடிக்க வைக்க ரொம்பவும் முயற்சி செய்திருக்கிறார். ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகள் காட்டில் நடப்பது போல் எடுக்கப்படுவதால் அந்த குளிர் மற்றும் கொசுக்கடியில் அவரால் நடிக்க முடியாது என்று வயது மூப்பின் காரணமாக பாரதிராஜா விலகிவிட்டார்.

இந்த நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன், விஜய் சேதுபதியை அந்த கேரக்டரில் நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார். விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது தான் ஏற்கனவே வெற்றிமாறனும் விஜய் சேதுபதியும் வடசென்னை திரைப்படத்தில் இணைந்து பணி புரிய இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

Also Read: ஆயிரக்கணக்கான பாடல்களில் இது தனித்து நிற்கும்.. மாத்தி மாத்தி புகழ்ந்து தள்ளிய வெற்றிமாறன், இளையராஜா

Trending News