Vetrimaaran: வெற்றிமாறன் படங்கள் ஒவ்வொன்றும் தரமான சம்பவமாக இருக்கும். சூரியை கதையின் நாயகனாக வைத்து விடுதலை படத்தை கொடுத்த அவர் தற்போது இரண்டாம் பாகத்தை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார். விரைவில் படம் ரிலீசுக்கு தயாராகிறது.
இதற்கு அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 என அவரின் லைன் அஃப் நீண்டு கொண்டே இருக்கிறது. இதில் எந்த படம் முதலில் தொடங்கப்படும் என்ற ஆர்வமும் ரசிகர்களுக்கு உள்ளது. ஆனால் தற்போதைய தகவலின் படி வேறொரு சம்பவம் காத்திருக்கிறது.
அதாவது வெற்றிமாறன் வடசென்னை ராஜன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார். இதன் படப்பிடிப்பு சத்தம் இல்லாமல் 75 சதவீதம் முடிந்து விட்டதாம். அந்த கதாபாத்திரத்தில் நடிப்பது வேறு யாரும் கிடையாது தனுஷ் மகனாக அசுரன் படத்தில் நடித்த கென் கருணாஸ் தான்.
வெற்றிமாறனின் ராஜன் வகையறா
விடுதலை 2 வேலைகள் முடிந்தவுடன் இப்படத்தின் மீதி வேலைகளை வெற்றிமாறன் தொடங்க இருக்கிறார். அதன்படி இப்படத்திற்கு ராஜன் வகையறா என பெயரிடப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
வடசென்னை படம் எடுக்கும் போதே இரண்டு மணி நேர காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அதில் ராஜன் யார்? அவருடைய பின்புலம் என்ன? என்பதில் தொடங்கி இறப்பு வரை காட்டப்படும். அதில் உள்ள சில காட்சிகள் தான் வடசென்னை படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
ஆனால் இப்படம் வட சென்னையையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஃபயராக இருக்கும் என்ற தகவல்களும் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. ஆக மொத்தம் வட சென்னை 2 படத்திற்கு முன் சிறப்பான ஒரு சம்பவம் ராஜன் வகையறா மூலம் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. விரைவில் மிகப்பெரிய அப்டேட் ஒன்று வெளிவர இருப்பதும் குறிப்பிடத்தக்கது.