செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ரகசியமாக சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகத்தை முடித்த வெற்றிமாறன்.. கத்திரிக்காய் முத்தினா கடை தெருவுக்கு வந்து தான் ஆகணும்

Vetrimaran: இயக்குனர் வெற்றிமாறனின் கால்சூட் கிடைக்காதா என டாப் ஹீரோக்கள் காத்துக் கிடக்கின்றனர். ஆனால் வெற்றிமாறனும் தன்னுடைய கதைக்கு தேவையான கதாநாயகனை மட்டுமே தேர்ந்தெடுத்து படங்களை இயக்கி வருகிறார். அந்த வகையில் சூரியை வைத்து இவர் இயக்கிய விடுதலை படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சில காட்சிகளை இப்போது படமாக்கி வருகிறார் வெற்றிமாறன். ஆகையால் விரைவில் விடுதலை 2 படம் ரிலீஸாக வாய்ப்பு இருக்கிறது. இது பலரும் அறிந்த விஷயம் தான். ஆனால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வெற்றிமாறனின் சூப்பர் ஹிட் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார்.

Also Read : பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் வெற்றிமாறன்.. மறுபடியும் முதல்ல இருந்தா என அரண்டு போன தயாரிப்பாளர்

அந்தச் செய்தியை இப்போது வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். கடந்த 2018 ஆம் ஆண்டு தனுஷ், இயக்குனர் அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வடசென்னை. இந்த படம் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

மேலும் வடசென்னை படத்தில் தனுசுக்கு குறைவான காட்சிகளும், அமீரை டானாகவும் காட்டி இருப்பார் வெற்றிமாறன். இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வடசென்னையை மையமாக வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை எடுத்து முடித்துள்ளார். இப்படம் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக ஓடக்கூடிய படமாம்.

Also Read : எல்லா படங்களிலும் வெற்றிமாறன் கைவிடாது தூக்கி பிடித்த நடிகர்.. இன்று வரை பெயரை காப்பாற்றி கொள்ளும் ஜாம்பவான்

அதில் ராஜனின் வாழ்க்கை, அவர் எங்கிருந்து வந்தார், என்ன செய்தார், எப்படி இறந்தார் என்பதை வெற்றிமாறன் படமாக எடுத்துள்ளார். ஆகையால் இப்படம் முழுக்க முழுக்க அமீரை வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ராஜன் வகையறா என்ற பெயரில் உருவாகி இருக்கிறதாம். இப்படம் வடசென்னை 2 என்ற பெயரில் வெளியாகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் கூறுகையில் இந்த படம் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், இதன் ரிலீஸுக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இந்த படம் வெளியானால் கண்டிப்பாக தமிழ் படங்களில் சிறந்த படங்களின் பட்டியலில் இடம்பெறும் என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆகையால் கத்தரிக்காய் முத்துனா கடை தெருவுக்கு வந்து தானே ஆகணும். எவ்வளவு ரகசியமாக படப்பிடிப்பு நடத்தினாலும் அந்த படத்தை ரசிகர்கள் தான் பார்த்தாக வேண்டும். ஆகையால் விரைவில் ரிலீஸ் தேதியை வெற்றிமாறன் வெளியிட வாய்ப்பு இருக்கிறது.

Also Read : பதட்ட நிலையிலையே வைத்திருக்கும் வெற்றிமாறன்.. விடுதலை கிடைக்குமா? மீண்டும் வேதாளம் ஏறிய முருங்கை மரம்

Trending News