Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய வெற்றிமாறன்..தனுசுக்கு புதிதல்ல!

ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்திய வெற்றிமாறன்..தனுசுக்கு புதிதல்ல!

Dhanuush : பொதுவாகவே சில காம்போ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அதில் ஒன்றுதான் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி. இவர்கள் ஒன்றாக இணைந்தால் அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். இப்படி உள்ளவர்களுக்குள் தற்சமயம் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக […]

Dhanuush : பொதுவாகவே சில காம்போ ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்ப்புடன் இருப்பார்கள். அதில் ஒன்றுதான் வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணி. இவர்கள் ஒன்றாக இணைந்தால் அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இப்படி உள்ளவர்களுக்குள் தற்சமயம் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது. அதாவது இவர்களது கூட்டணியில் வெளியான வடசென்னை படம் பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. இந்த படம் வெளியான சமயத்தில் இருந்தே பார்ட் 2 எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த சூழலில் வெற்றிமாறன் தனுசை சந்தித்து வடசென்னை 2 படம் எடுக்கப் போவதாக கூறி இருக்கிறார். ஆனால் தனுஷ் கைவசம் இப்போது நிறைய படங்கள் இருப்பதால் சிம்புவை வைத்து வட சென்னை 2 எடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாக வெற்றிமாறன் கூறியிருக்கிறார்.

தனுசை உதாச்சினப்படுத்திய வெற்றிமாறன்

தனுசும் அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் பண்ணுங்க என்று கூறிவிட்டாராம். தன்னுடைய இப்படத்தை எப்படி இன்னொரு நடிகரிடம் கொடுக்க முடியும். எந்த நடிகராக இருந்தாலும் அவர்களுக்கு அதில் மனம் இருக்காது. இந்நிலையில் வெற்றிமாறனுக்கு ஆரம்பத்தில் பொல்லாதவன் படத்தை கொடுத்தது தனுஷ் தான்.

அந்த படம் தான் வெற்றிமாறனின் அடையாளமாக இருந்தது. இப்போது அவரே ஏற்றிவிட்ட ஏணியை உதாசீனப்படுத்தியது போல் செய்து விட்டாரே என்று பலரும் கூறி வருகிறார்கள். ஆனால் தனுசுக்கு இது ஒன்றும் புதிதல்ல.

சிவகார்த்திகேயன், அனிருத் போன்ற பலர் வளர்ந்த பிறகு தனுஷை உதாசீனப்படுத்தி இருக்கிறார்கள் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகிறார்கள். மேலும் ஏற்றி விட்டவர்கள் தன்னை இடறிவிட்டாலும் உழைப்பின் மீது உள்ள நம்பிக்கையால் அடுத்த

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.