செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

அஜித்திற்கு மாஸான கதையை ரெடி செய்த வெற்றிமாறன்.. வயித்தெரிச்சலில் தனுஷ், விஜய்

Vetrimaaran with AK combo: தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன், நாயகனே சராசரி மனிதன் போல் காட்டி அசாதாரணமாக சிந்திக்க வைத்து எதிரிகளை துவம்சம் செய்து சமூகத்திற்கு கண்டிப்பாக ஒரு மெசேஜ் கொடுத்து விடுவார். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும்  சமூகத்தின் பேசும் பொருளானது உண்மையே.

தனக்கென தனி தன்மையுடன் வெற்றி இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன், தனுஷ் உடன் தொடர்ச்சியாக பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். முதன்முறையாக அஜித்துடன் AK 64 இல் இணைய இருப்பது  ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்கள்  பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

வெற்றிமாறன் அவர்கள் மங்காத்தா படத்திற்கு முன் அளித்த பேட்டியில் அஜித் சார், “எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னைத்தானே செதுக்கியவர். யாருக்கும் எதற்காகவும்  பயப்பட மாட்டார். இவரை போல  மனசுல பட்டத அப்படியே சொல்ற தைரியம் வேற யாருக்கும் கிடையாது” என்று புகழ்ந்திருப்பார். உண்மைதான் சினிமா பிரபலங்கள் பலரும் தன் மனதில் உள்ளவற்றை அப்படியே வெளிக்காட்டுவதில்லை.

Also read: சூர்யாவின் சினிமா வாழ்க்கை முடிய போகிறது.. அதிர்ச்சி தகவலை சொன்ன அஜித்தின் நண்பர்

இந்த பிம்பத்தை உடைத்தெறிந்த அஜித்திற்கு தகுந்தவாறு இரண்டு கதை ரெடி பண்ணி வைத்திருந்தார் வெற்றிமாறன். இதில் ஒரு கதை விஜய்க்காக ரெடி பண்ணியதாம். இரண்டு கதையும் அஜித் சாருக்கு செட் ஆகும் என்று கூறிய வெற்றிமாறன், ஒன்றை கூற அஜித்திற்கு கதை பிடித்து போய் ப்ரொடக்சன் கம்பெனியும் ஓகே சொல்ல AK 64 கன்ஃபார்ம் ஆகி உள்ளது.

வெற்றிமாறன் விடுதலை 2 மற்றும் வாடிவாசலை முடித்துவிட்டு அடுத்த ஆண்டு அஜித்துடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் வாடிவாசல் இழுபறியாக உள்ள நிலையில் அஜித்தை கொண்டு ஏன் வாடி வாசலை இயக்கக் கூடாது என யோசனையில் ஆழ்ந்து வருகிறார் வெற்றிமாறன். இது பற்றி சூர்யாவோ வாய் திறவாது அமைதியாக உள்ளார். என்ன நடக்கும் என்பதை காலம் ஒன்றே உரைக்கும்.

தன் நிலையில் திரியாது தன்னடக்கத்தோடு திரியும் அஜித்திற்கு தொடர்ச்சியாக வெற்றி இயக்குனர்களின் இயக்கத்தில் படங்கள் வரிசை கட்டி காத்துக் கொண்டிருக்கின்றன. அடுத்த ஆண்டு வித்தியாசமான கேரக்டரில் வேறுபட்ட கதைக்களத்தில் அஜித்தை காண ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

Also read:தலைக்கு மேல வெள்ளமே போனாலும் அமீர் இல்லாம வாடிவாசல் இல்ல.. வெயிட்டான ரோல் கொடுத்திருக்கும் வெற்றிமாறன்

Trending News