வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

இந்தியன் 2 ஆபத்தை அறிந்த வெற்றிமாறன்.. விடுதலை 2 படத்திற்கு போடும் முட்டுக்கட்டை

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 படம் மண்ணை கவ்வவியது. சங்கர் மற்றும் கமல் என்ற மாபெரும் கூட்டணியில் இந்த படம் தோல்வியை சந்தித்தது எல்லோருக்கும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து பலஇயக்குனர்கள் தாம் எடுக்கும் இரண்டாம் பாக படங்களை யோசித்து கையாளுகின்றனர்.

ஏற்கனவே இந்தியன் 2 படத்திற்கு பணப் பற்றாக்குறையில் தவித்து வந்த லைக்கா ஆரம்பத்தில் இருந்தே படத்திற்கான செலவுகளை குறைக்கும்படி சங்கரிடம் கூறினார். ஆனால் சங்கர் கேட்கவே இல்லை மொத்தமாய் இந்தியன் 2விற்கு 350 கோடிகள் செலவழிந்தது. ஆனால் படத்தின் வசூல் ஒட்டுமொத்தமாக வெறும் 120 கோடிகள் மட்டுமே.

இந்தியன் 2 படத்தை கிட்டத்தட்ட ஏழு மணி நேர பிலிம் ரோலாக எடுத்து வைத்திருந்தனர். அதனால் சங்கருக்கு எதை கட் செய்து ஒரு படமாக வெளியிடலாம் என தெரியவில்லை. படம் நீளமாக எடுத்ததால் கட் பண்ண வேண்டாம் இரண்டு மூன்று பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என சங்கர் முடிவு செய்துவிட்டார்.

விடுதலை 2 படத்திற்கு போடும் முட்டுக்கட்டை

இப்பொழுது இந்தப் படத்தின் படு தோல்வியை பார்த்து நிறைய படங்கள் சுதாரித்து விட்டது. 2023 வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாக நடித்து வெளிவந்த படம் விடுதலை. இதன் இரண்டாம் பாகம் தற்போது எடுத்து வருகிறார்கள். படம் 99 சதவீதம் முடிந்து விட்டது. ஆனால் வெற்றிமாறன் முழு திருப்தி அடையாமல் இருக்கிறார்.

விடுதலை 2 ஆம் பாகத்தை கிட்டத்தட்ட ஆறரை மணி நேரம் எடுத்து முடித்துள்ளனர். அதனால் விடுதலை படத்தை மூன்று பாகங்களாக முதலில் வெளியிடுவதற்கு வெற்றிமாறன் திட்டம் போட்டுள்ளார். இருந்தாலும் இந்தியன் 2 பட கதை போல் மாறிவிடக்கூடாது என இரண்டாம் பாகத்தோடு முடித்துள்ளனர்.

Trending News