வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

பெரும் மண்டையடியாய் மாறிய விடுதலை 2.. தினுசு தினுசாக கேரக்டரை கொண்டு வரும் வெற்றிமாறன்

Vettrimaran viduthalai 2: இந்தா வருது அந்தா வருதுன்னு சொல்லி கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியும் இன்னும் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகவில்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த படம் தான் விடுதலை. ஆனால் படம் பார்த்த பின் இப்படத்தை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை.

அந்த அளவிற்கு இப்படத்தின் கதையும் சூரியின் நடிப்பும் ரொம்பவே மக்களை கவர்ந்தது. அத்துடன் விஜய் சேதுபதியின் கதையும் மர்மமான முறையில் இருப்பதால் அது என்னவாக இருக்கும் என்று மக்களிடம் ஒரு ஹைப்பை ஏற்படுத்தி விட்டது. அதனாலேயே இப்படத்தை ஆவலாக ரசிகர்கள் திரையில் பார்ப்பதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இது தெரிந்ததனால் தான் வெற்றிமாறன் ரசிகர்கள் எதிர்பார்த்தபடி படம் தூக்கலாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கி வருகிறார். ஆனால் அதற்காக வருஷக்கணக்கில் படப்பிடிப்பை இழுத்துக் கொண்டு இழுத்தடித்தால் படத்தின் மீதான நம்பிக்கை போய்விடும். அப்படித்தான் தற்போது வெற்றிமாறனின் செயல்கள் இருக்கிறது.

Also read: நடிகர்களை மாட்டி விட இணைய கூலிப்படைகள் செய்யும் வேலை.. மாபியா கேங் ஆக மாற்றப்படும் வெற்றிமாறன் விஜய் சேதுபதி

அதாவது சூட்டிங் முக்கால்வாசி முடிந்து விட்டது ரிலீசுக்கு தயாராகி உள்ளது என்று செய்திகள் வெளிவந்தது. ஆனால் வெற்றிமாறன் இன்னும் இப்படத்தில் பல வித்தியாசமான கேரக்டர்களை கொண்டு வந்து தினுசு தினுசாக மாற்றி வருகிறார். அதாவது இப்படத்தை ஒரு மல்டி லேயர் படமாக மாற்றி விட்டாராம். அந்த வகையில் மஞ்சு வாரியர் மற்றும் கருணாஸ் மகன் கென் கருணாஸ் கேரக்டர்கள் உள்ளே கொண்டு வந்திருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் விஜய் சேதுபதி இளவயதில் இருக்கும் மாதிரி அதற்கான காட்சிகளும் உள்ளே வைத்திருக்கிறார். அதனால் இதை வைத்து காட்சிகள் அமைக்கப்படுவதால் இன்னும் கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகும் என்று வெற்றிமாறன் சொல்லி இருக்கிறார். பொதுவா வெற்றிமாறன் இரண்டு மாதம் என்று சொன்னாலே அதை அஞ்சு மாசம் வரை இழுத்தடிப்பார்.

தற்போது விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தை முழுமையாக முடிப்பதற்கு இன்னும் ஐந்து மாதங்கள் என்று சொல்லியதால் எப்படியும் கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆக்கி விடுவார் என்று பட குழுவினர் பெரும் தலைவலியுடன் தவித்து வருகிறார்கள். அந்த வகையில் எப்பொழுதுதான் இந்த படத்தை முடித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம் என்று மொத்த ஆர்டிஸ்ட்களும் வெற்றிமாறனிடம் போராடி வருகிறார்கள்.

Also read: வெற்றிமாறன், சுதா கொங்காராவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சூர்யா.. வருஷகணக்கா சொல்லும் காரணம்

Trending News