ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சங்கர் செய்த அதே தப்பை செய்த வெற்றிமாறன்.. மொத்த பாரத்தையும் இறக்கி வைத்த வாத்தியார்

சங்கர் சில மாதங்களாகவே கடும் மன உளைச்சலில் இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் வீட்டில் மகள்கள் கல்யாண விஷயத்தில் பல பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியன் 2 படத்திற்குப் பிறகு கொஞ்சம் டல்லாக காணப்படுகிறார்.

தற்போது ராம்சரணை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் முக்கால்வாசி முடிந்து விட்டது. இந்தியன் 2 படம் எடுக்கும்போதே அதே படத்தின் மூன்றாம் பாகத்துக்கும் தகுந்தவாறு பல காட்சிகள் எடுத்து வைத்துள்ளார் சங்கர்.

சங்கர் எதிர்பார்த்த அளவுக்கு இந்தியன் 2 படம் போகவில்லை. எல்லா பக்கத்திலும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது. இதனால் மூன்றாம் பாகத்தை கைவிடும் எண்ணம் கூட அவருக்கு வந்துவிட்டதாம்.

மொத்த பாரத்தையும் இறக்கி வைத்த வாத்தியார்

இந்த படங்களுக்காக பல நூறு கோடிகளை லைக்கா இறக்கி உள்ளது. இதனால் எடுத்து வைத்த காட்சிகளை மீண்டும் சரி செய்ய திட்டமிடுகிறார் சங்கர். இதனால் டபுள் செலவு ஆகிறதாம் . இப்பொழுது இதே நிலைமையில் தான் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இருக்கிறது.

விடுதலை முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகத்திற்காக பல காட்சிகளை எடுத்துள்ளனர். அதுவே பாதி படம் வந்து விட்டதாம். அது மட்டும் இன்றி எடுத்து வைத்ததில் முழு திருப்தி வெற்றிமாறனுக்கு இல்லை. இந்தியன் 2 படம் போல் இதுவும் ஆகி விடக்கூடாது என மீண்டும் அதை இயக்கி வருகிறார்.

ஒரு பக்கம் விஜய் சேதுபதி மிஸ்கின் இயக்கும் ட்ரெயின் திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். அதுபோக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவரிடம் டீல்பேசி வருகிறார்கள். நமக்கு ஏன் வம்பு என விடுதலை இரண்டாம் பாகம் பொறுப்பு அனைத்தையும் வெற்றிமாறனிடம் ஒப்படைத்து விட்டார் விடுதலை பெருமாள் வாத்தியார்.

Trending News