புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வெற்றிமாறனை குஷிப்படுத்திய கருணாஸ்.. மனைவியுடன் வெளியான பேமிலி போட்டோ!

தமிழ் திரையுலகில் பல திரைப்படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். ஏராளமான விருதுகளை வாங்கி குவித்திருக்கும் இவர் தற்போது விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார். இது பற்றிய அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் படம் எப்போது தொடங்கும் என்று தெரியாததால் ரசிகர்கள் அந்த அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் கருணாஸின் வீட்டிற்கு விருந்துக்காக சமீபத்தில் சென்றுள்ளார். தமிழில் ஒரு காமெடியனாக அறிமுகமாகி இன்று ஹீரோ, குணச்சித்திரம் என்று பல கேரக்டர்களில் நடிகர் கருணாஸ் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

மேலும் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்ற இருக்கிறார். இதைப் பற்றி கருணாஸ் சில மாதங்களுக்கு முன்பு மிகவும் மகிழ்ச்சியாக ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தற்போது வாடிவாசல் திரைப்படம் தாமதமாகி வந்தாலும் கருணாஸ் வெற்றிமாறனுடன் பணிபுரியும் நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் வெற்றிமாறனுக்கு தன் வீட்டில் சிறப்பாக விருந்து வைத்து கௌரவப்படுத்தியுள்ளார்.

கருணாசின் அழைப்பை ஏற்ற வெற்றி மாறனும் தன் குடும்பத்துடன் அந்த விருந்தில் பங்கேற்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் வெற்றிமாறன் தன் குடும்பத்துடன் இருக்கும் போட்டோ பலரையும் கவர்ந்துள்ளது.

வெற்றிமாறனுக்கு ஆர்த்தி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இந்த போட்டோவை பார்த்த பலரும் வெற்றிமாறனுக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகளா என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

vetrimaaran-karunas
vetrimaaran-karunas

Trending News