வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அந்த விஷயத்தை தெரியக்கூடாது என நினைத்தேன்.. மேடையில் கூறிய வெற்றிமாறன்

நடிகர் தனுஷுக்கு தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். வெற்றிமாறன் தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

வெற்றிமாறனின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் மதிமாறன். இவர் தற்போது ஜிவி பிரகாஷ் நடிப்பில் செல்ஃபி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். செல்ஃபி படத்தில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். வெற்றிமாறனின் ஆடுகளம் படத்தில் மதிமாறன் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் செல்ஃபி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் வெற்றிமாறன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியபோது ஒரு சுயசரிதை குறும்படத்தை எடுத்துகொண்டு என்னிடம் வந்து காட்டினான். எனக்கு அது பிடித்திருந்தது, அதனால் தான் அவனை என்னுடைய படத்தில் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன் என கூறினார்.

மதிமாறன் ஒரு அற்புதமான இயக்குனர் என புகழ்ந்து பேசினார். அதுமட்டுமல்லாமல் படத்தை நான் பார்த்துவிட்டேன் அதில் ஒரு எனர்ஜி இருக்கிறது என்று குறிப்பிட்டார். அதன்பிறகு நான் ஒரு விஷயத்தை கடைசி வரைக்கும் மறைத்து வைக்க நினைத்தேன். மணிமாறன் என் உறவினர் என்பதை எந்த ஒரு இடத்திலும் நான் காட்டிக் கொள்ளவே இல்லை.

அதாவது மதிமாறன் என்னுடைய சொந்தக்காரன். இவருடைய அப்பா தான் என்னோட மாமா, அவர் தான் எனக்கு வெற்றிமாறன் என பெயர் வைத்தார் என மேடையில் கூறினார். அதனால்தான் எனக்கு வெற்றிமாறன் என்றும், அவருக்கு மதிமாறன் என்றும், மற்றொரு உறவினருக்கு தமிழ்மாறன் என்றும் பெயர் வைத்தார்.

இந்தப் பெயரை வைத்த என் மாமாவுக்கு நன்றி என வெற்றிமாறன் மேடையில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் உறவினர் என்பதால் நான் மதிமாறனை சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால் மதிமாறன் நல்ல திறமைசாலி என்பதால்தான் சேர்த்துக்கொண்டு எனக் கூறினார்.

Trending News