திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தும் வெற்றிமாறன்.. மறுபடியும் முதல்ல இருந்தா என அரண்டு போன தயாரிப்பாளர்

பேருக்கு ஏற்றார் போல் வெற்றியை தனக்கு சொந்தமாக்கி கொண்டிருக்கும் வெற்றிமாறன் இப்போது வாடிவாசல் படத்திற்கான வேலைகளை ஆரம்பித்துள்ளார். இவர் ஒரு படம் எடுக்கிறார் என்றாலே அது நிச்சயம் தேசிய அளவில் விருதுகளை வாரி குவித்து விடும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனாலேயே இவருடைய படங்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த விடுதலை படமும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து படப்பிடிப்பு முடிந்து விட்டதால் விரைவில் விடுதலை 2 வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

Also read: சாக்லேட் பாய்க்குள் ஒளிந்திருந்த வில்லன்.. ஒரு வருடத்திற்கு பிறகும் கொண்டாடப்படும் சூர்யா

ஆனால் இப்போது அது நடக்க வாய்ப்பே இல்லை எனும் அளவுக்கு வெற்றிமாறன் பக்கா பிளான் போட்டு காய் நகர்த்தி வருகிறாராம். அதாவது இன்னும் இரண்டு வாரம் சூட்டிங் நடத்த வேண்டும் என்று ஒரு குண்டை போட்டு தயாரிப்பு தரப்பிற்கு ஆட்டம் காட்டிக்கொண்டிருக்கிறாராம். ஏற்கனவே ஒரே பாகமாக வெளிவர வேண்டிய படம் இரண்டு பாகமாக மாறியது.

அதிலும் 40 நாளில் ஷூட்டிங் முடிப்பதாக சொல்லி அதை மாத கணக்கில் இழுத்தடித்து பட்ஜெட்டையும் எகிற வைத்தார் வெற்றிமாறன். அந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத தயாரிப்பு தரப்பு தற்போது இந்த விஷயத்தால் பீதியில் உறைந்து போய் இருக்கிறதாம். ஏற்கனவே பட்ட கஷ்டம் அனைத்தும் கண் முன்னால் கிராஸ் ஆகவே மறுபடியும் முதல்ல இருந்தா என்று வெளிப்படையாகவே அலறிவிட்டதாம் தயாரிப்பு தரப்பு.

Also read: கமல்,விஜய்யுமே இன்னும் வெயிட்டிங் லிஸ்ட் தான்.. அலட்சியம் செய்யும் தாடிக்கார இயக்குனர்

ஆனால் விசாரித்து பார்த்ததில் படத்தை அடுத்த வருடம் வெளியிடுவதற்காக தான் இப்படி ஒரு வேலையை பார்த்து வருகிறாராம் வெற்றிமாறன். அதாவது விடுதலை படம் நல்ல விமர்சனங்களை பெற்ற நிலையில் எப்படியும் விருதுக்கு தேர்வாகிவிடும். அந்த வகையில் இரண்டாம் பாகத்தை அடுத்த வருடத்தில் வெளியிட்டால் அந்த வருடத்திற்கான விருதையும் தட்டி தூக்கி விடலாம் என்று தான் இப்படி ஒரு பிளான் போட்டிருக்கிறாராம்.

ஆக மொத்தம் இரண்டு வருடங்களுக்கான விருதையும் மொத்தமாக தட்டி தூக்கவே அவர் மீண்டும் சூட்டிங் கிளம்புகிறேன் என்று அலப்பறையை கூட்டிக் கொண்டிருக்கிறார். இதை வெளிப்படையாக சொல்லாமல் காய் நகர்த்தும் வெற்றி மாறனால் தயாரிப்பாளர் தான் பாவம் நெஞ்சை பிடிக்காத குறையாக இருக்கிறாராம்.

Also read: வெற்றிமாறனின் சக்சஸ் படத்தை எடுக்க ஆசைப்பட்ட மணிரத்னம்.. விஷயம் தெரிந்து முந்தி கொண்ட சாமர்த்தியம்

Trending News