வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பணத்துக்காக நல்ல பெயரை கெடுத்துக் கொண்ட வெற்றிமாறன்.. மக்களை ஏமாற்ற இப்படி ஒரு நாடகமா?

இயக்குனர் வெற்றிமாறன் என்று சொன்னாலே ஒரு நியாயமான, நேர்மையான நபராகத்தான் பார்க்கப்படுகிறார். இப்படிப்பட்ட இயக்குனர் தனது பெயரை கெடுத்துக்கொள்ளும்படியான விஷயங்களை செய்தார் என்று சொன்னால் யாராலும் நம்ப முடியவில்லை.

மக்களின் கலாச்சாரம், வாழ்வியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட தொடர்ந்த வெற்றிமாறன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தோல்வியையே காணாத இயக்குனர்களில் வெற்றிமாறனும் ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

Also Read : வெற்றிமாறனுக்கு இந்த நிலைமையா?. படாதபாடு படுத்தி சுற்றலில் விட்ட ராகவா லாரன்ஸ்

இந்நிலையில் வெற்றிமாறனுக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு ஒரு தவறான செயலில் ஈடுபட்டுள்ளார். அதாவது சமீபத்தில் கலையரசன் நடிப்பில் வெளியான பேட்டை காளி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்தப் படத்தை வெற்றிமாறன் தான் தயாரித்தார் என்று படத்தில் இவரது பெயர் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி பேட்டை காளி படம் வெளியாகும் போது வெற்றிமாறன் சில ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால் இவர் பேட்டை காளி படத்தை தயாரிக்கவே இல்லையாம்.

Also Read : போலீசை தாக்கும்படியான படங்கள் எடுப்பது ஏன்?. உண்மையை கூறிய வெற்றிமாறன்

அதாவது தனது பெயரை பயன்படுத்தி கொள்ள கிட்டத்தட்ட 2 கோடி வாங்கிக் கொண்டாராம் வெற்றிமாறன். இப்படி தனது பெயரை பணத்துக்காக விட்டுக் கொடுக்க எப்படி வெற்றிமாறன் சம்மதித்தார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது. இது அவருடைய அடுத்த படத்திற்கு கெட்ட பெயரை உண்டாக்கும் என்பதை மறந்து விட்டாரா என்ற குழப்பமும் எழுந்துள்ளது.

மேலும் பேட்டை காளி படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் வாடிவாசல் படத்தின் முன்னோட்டமாக இந்த படத்தை வெளியிட்டார் என்று படத்திற்கு வரவேற்பு குவிந்தது. ஆனால் வெற்றிமாறன் இவ்வாறு செய்திருப்பது அவர் மீதுள்ள மரியாதையை கொஞ்சம் குறைய செய்துள்ளது.

Also Read : அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் தனுஷின் ஐந்து பார்ட் 2 படங்கள்.. வெற்றிமாறனுக்கு மட்டும் ஒரு வருடம் கால்ஷீட்

Trending News