புதன்கிழமை, ஜனவரி 15, 2025

வச்சது ஆப்பு என்று கூட தெரியாமல் பாராட்டிய உதயநிதி.. வெற்றி மாறனின் துணிச்சலான செயல்

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மூன்று வருடங்களாக உருவாக்கிக் கொண்டிருந்த படம் தான் விடுதலை. இதில் ஹீரோவாக முதன் முதலில் சூரி நடித்திருக்கிறார். அடுத்தபடியாக விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் முடிக்கப்பட்டு இப்படத்தை இந்த மாத கடைசியில் 31 ஆம் தேதி வெளியிடுவதற்கு முடிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

அதற்கான வேலைகளிலும் படுசுட்டியாக பார்த்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். மேலும் இந்த படத்தை விநியோகம் செய்வது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான். அதற்காக இவர்கள் நேற்று இந்த படத்தை பார்த்திருக்கிறார்கள். இந்த படத்தை பார்த்துவிட்டு சிலிர்த்து போன உதயநிதி, வெற்றிமாறனை கட்டித்தழுவி அதிக அளவில் பாராட்டி இருக்கிறார்.

Also read: தனுஷ் வாய்ப்பு கொடுத்து வெற்றி பெற்ற 5 பிரபலங்கள்.. தரமான இயக்குனரை அறிமுகப்படுத்திய பொல்லாதவன்

ஆனால் உதயநிதி இப்படி பாராட்டியது கொஞ்சம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இப்படம் முழுக்க முழுக்க போலீஸ்காரர்கள் செய்யும் தில்லு முல்லு வேலைகளை தோலுரித்துக் காட்டியுள்ளார். அப்படி இருக்கையில் ஆளுங்கட்சி அமைச்சராக இருக்கும் உதயநிதி இந்த படத்தை பார்த்து பாராட்டியது மிகவும் வியக்கத்தக்க இருக்கிறது.

ஆனால் இவர் இதை தெரிந்துதான் செய்கிறாரா இல்லை உண்மையாகவே இந்த படத்தின் மையக்கருத்தை புரிந்து கொள்ளவில்லையா என்று தெரியவில்லை. இது இவருக்கு வைத்த மறைமுகமான ஆப்பு தான் என்று கூட தெரியாமல் பாராட்டி இருக்கிறார். இருந்தாலும் இவருக்கு இந்த படத்திற்கான விளைவுகள் இப்பொழுது புரியலனாலும் படம் ரிலீசுக்கு பிறகு வரும் விமர்சனங்கள் மூலம் தெரிந்து கொள்ளப்படுவார்.

Also read: பல சேனல்களுக்கு வாரி வழங்கும் உதயநிதி.. பினாமி யார் என வெளிச்சம் போட்டு காட்டிய பிரபலம்

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனை பாராட்டியே ஆக வேண்டும். இப்படி ஒரு துணிச்சலான படத்தை எடுத்ததோடு மட்டுமல்லாமல் இந்த படத்தை ரெட் ஜெயின் மூவிஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பதை தெரிந்தும் இவர் இந்த மாதிரியான கதையை கொண்டு வந்திருக்கிறார் என்றால் இவரை உண்மையிலே பாராட்டதான் செய்யணும்.

மேலும் இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுவதால் அதிக தியேட்டர்களை ஒதுக்கி இருக்கிறார். அத்துடன் வெற்றிமாறனின் நீண்ட நாள் போராட்டங்களுக்கு பிறகு வரும் படம் மற்றும் சூரி நடிப்பை பார்ப்பதற்கு ஆவலாக காத்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இப்படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Also readஏ சர்டிபிகேட் வாங்கிய விடுதலை படம்.. சென்சாரில் கட் செய்யப்பட்ட 12 வார்த்தைகள்

Trending News