வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

10 கோடியை அசால்ட்டாக வசூலித்த வெற்றிமாறன்.. 15 வருடங்கள் ஆகியும் No.1 ட்ரெண்டான படம்

வித்தியாசமான கதைக்களத்தின் மூலம் தொடர்ந்து வெற்றிப்படங்கள் மட்டுமே கொடுத்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். தற்போது சூரியை வைத்து விடுதலை என்ற படத்தை எடுத்து வருகிறார். இதைத்தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் வெற்றிமாறன் 15 வருடத்திற்கு முன் முதல் முதலாக இயக்குனரான முதல் படத்தை, தற்போது வரை ரசிகர்கள் தலையில் தூக்கி கொண்டாடி வருகின்றனர். இந்த படம் அசால்ட் ஆக அப்போவே 10 கோடியை வசூலித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: மத்தளம் போல் அடிமேல் அடிவாங்கும் தனுஷ்.. ரகசியமாய் வெற்றிமாறனுக்கு போட்ட போன் கால்

அதாவது தனுஷின் அஸ்தான இயக்குனர் வெற்றிமாறன் என்ற பெயரை பெறுவதற்கு அச்சாரமாக இருந்தது, இவர்களது முதல் கூட்டணியில் வெளியான படம் பொல்லாதவன். 2007 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தின் முலம் தான் வெற்றிமாறன் இயக்குனராக கோலிவுட்டிற்கு அறிமுகம் ஆனார்.

இந்தப் படம் இத்தாலிய திரைப்படத்தின் தழுவல். இதில் வெற்றிமாறன் பைக் லவ்வர்களை மனதில் வைத்து படத்தை சிறப்பாக இயக்கியிருப்பார். இந்த படம் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் இருக்கும் 16 திரையரங்குகளில் 50 நாட்களுக்கு மேலாக ஓடியது.

Also Read: தனுஷை துன்புறுத்திய வெற்றிமாறன்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

அதிலும் சிறப்பாக 75 நாட்களைக் கடந்தும் சென்னை சிட்டியில் உள்ள 4 திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தது. அதுமட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தில் 100 நாட்களுக்கு மேலாக 5 தியேட்டர்களில் ஓடி மிரள வைத்தது. இவ்வாறு 15 வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பொல்லாதவன் திரைப்பட வெளியான தினத்தை இன்றும் நினைவு கூர்ந்து அந்தப் படத்தை சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி கொண்டிருக்கின்றனர்.

மேலும் பொல்லாதவன் படத்திற்குப் பிறகு தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் தேசிய விருதை வாங்கி குவித்த ஆடுகளம், அசுரன் போன்ற படங்களும், வடசென்னை போன்ற கேங்ஸ்டர் படங்களும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.

Also Read: மீண்டும் உருவாகும் வெற்றிமாறனின் கேங்ஸ்டர் படம்.. தனுஷை மிஞ்சும் நடிப்பு அரக்கன்

Trending News