வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி ஹீரோவாகவும் விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடித்திருந்த படம் விடுதலை பாகம் 1. இப்படத்தில் சூரி குமரேசன் என்ற கேரக்டரில், ஒரு காவலராகவும், விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியாராகவும் நடித்திருந்தனர். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவானது. இளையராஜா இசையமைத்திருந்தார்.
இப்படம் கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அருமபுரி ஊர் மக்களுக்காக இரக்கப்படும் சூரி, தமிழரசியின் மனதில் இடம்பிடிக்கிறார். அங்கு, காவல் படைக்கும், மக்கள் படைக்கும் மோதல் முற்றிய நிலையில், அப்பாவி மக்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்படுகிறார்கள்.
அப்பாவி மக்களை இச்சித்தரவதையில் இருந்து காப்பாற்ற பெருமாள் முருகனை கைது செய்ய வேண்டும் என்று குமரேசன் நினைக்கும் நிலையில் அவர் பெருமாளை சந்தித்தாரா? என்பதுடன் முதல் பாகத்தின் கதை முடியும். சுவாரஸ்யமாக இருந்த முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2 வது பாகமும் தயாராகி வருகிறது.
இப்படத்தில் விஜய்சேதுபதி, மஞ்சுவாரியர் நடித்துள்ளனர். இப்படத்தின் முதல் சிங்கில் இளையராஜா இசையில் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் டிரெயிலர் & பாடல்கள் வரும் நவம்பர் 26 ஆம் தேதி வெளியாகும் எனவும், இப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி தியேட்டரில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
படம் வெளியாகும் முன்பே டிவிஸ்ட்
முதல் பாகத்தில் சூரிக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் விஜய்சேதுபதிக்கு அதிக முக்கியத்துவமும் அவர் திரையில் அதிக நேரம் தோன்றுவார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் நீண்ட நாட்களாக இப்பட ஷூட்டிங் நடந்து வந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு வெற்றிமாறன் இப்படத்தை நிறைவு செய்து, பூசணிக்காயையும் உடைத்துள்ளனர். அதேசமயம், இப்படத்தின் ரிலீஸ் தேதியை வெற்றிமாறனுக்கே தெரியாமல், தயாரிப்பாளர் அறிவித்திருந்த நிலையில், அவருக்கே தெரியாமல் வெற்றிமாறன் படத்தை நிறைவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெற்றிமாறனை அழ வைத்த விஜய்சேதுபதி
இத்தனை ஆண்டுகள் நடந்த இந்த விடுதலை 2 பாகங்களுக்காக ஷூட்டிங் முடிந்த நிலையில், பிரியாவிடை தரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது விஜய்சேதுபதி முக்கால் மணி நேரம் பேசியதைக் கேட்டு, வெற்றிமாறன் கண்கலங்கி அழுததாக தகவல் வெளியாகிறது. ஒரு குடும்பமாக அனைவரும் 2 பாகங்களிலும் பணியாற்றி விடைபெறும் போது முக்கால் மணி நேரம் பேசியுள்ளார் என்றால் அது அனைவரின் சார்பிலும் விஜய்சேதுபதி பேசியிருப்பார். இப்படியும் ஒரு படத்தின் ஃபேர்வெல் இருக்குமா என ரசிகர்கள் வியந்து பேசி வருகின்றனர்.
வெற்றிமாறனின் விடுதலை படத்தின் முதல் பாகமே அனைவரையும் மிரட்டிய நிலையில், 2வது பாகமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நிச்சயம் இப்படம் சூரி, விஜய்சேதுபதிக்கு சிறந்த படமாக அமையும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.