கூட்டத்தில் ஒருவன், ஜெய் பீம் போன்று வித்தியாசமாய் கதைகளை யோசிக்கும் இயக்குனர் ஞானவேல். இப்பொழுது ரஜினியை வைத்து வேட்டையன் படத்தை இயக்கி உள்ளார். இது முற்றிலும் ரஜினி படம் போல் இருக்காது என்றும் படத்தில் இரண்டு விதமான கதைகளை எடுத்து ஒருங்கிணைத்துள்ளார்கள் என்பதும் தெரிகிறது.
அதாவது இந்த படத்தில் இரண்டு கதைகள் இருக்கிறதாம். காவல்துறை செய்யும் என்கவுண்டர் மற்றும் கல்வித்துறையில் நடக்கும் ஊழல் இதை இரண்டையும் கலந்து ஒரு கதையை உருவாக்கியுள்ளாராம் ஞானவேல். இந்த படத்திற்கு வில்லனாக ராணா நடித்துள்ளார். அவர் கல்வி ஊழல் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதைப்போலத்தான் ஹச் வினோத் தளபதியை வைத்து இயக்கும் விஜய் 69 படத்தில் இரண்டு கதைகள் வருகிறதாம். இந்த படத்தில் டைட்டில் கார்டில் தீபந்தம், துப்பாக்கி போன்றவற்றை சிம்பாலிக்காக காட்டுகிறார். இதில் இருந்து இந்த படத்திலும் இரண்டு கதைகள் என்பது தெரிகிறது.
எல் சி யு போல் உருவாகி வரும் புது டிரண்ட்
விஜய் இந்த படத்தில் காவல்துறை அதிகாரியாக வருகிறார். அதன் பின்னர் அரசியல்வாதிகளால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதால் அந்த இடத்திற்கு சென்றால் தான் அனைவருக்கும் பாதுகாப்பு என்று தீப்பந்தம் எடுக்கிறார். பின்னர் படத்தில் அரசியலையும் ஒரு கை பார்க்கிறார்.
தமிழ் சினிமாவில் இப்பொழுது இரண்டு மூன்று கதைகளை உருவாக்கி அதை நேர்க்கோட்டில் கொண்டு வரும் அந்தாலஜி மூவிக்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஒரே மாதிரியான கதைகளை விட இப்பொழுது இந்த மாதிரி படங்கள் ஹிட் ஆகிறது. லோகேஷின் எல் சி யு படம் போல் தமிழ் சினிமாவில் தலை எடுக்கிறது அந்தாலஜி கலாச்சாரம். உதாரணமாக வீரமே வாகை சூடும் மாதிரி படங்களை சொல்லலாம்.