ரஜினியின் வேட்டையன் படத்தை தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் செய்கிறது ரெட் ஜெயன்ட் மூவிஸ். பிளாக்பஸ்டர் ஜெயிலர் படத்துக்கு பின் ரஜினி படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியதால், இந்த படத்திற்கும் பெரிய கலெக்சனை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்
160 கோடியில் லைக்கா இந்த படத்தை தயாரித்துள்ளது. இப்பொழுது பழைய தயாரிப்பாளர்கள்மற்றும் விநியோகஸ்தர்கள் பல பேர் லைக்காவை கொக்கு போல் கொத்தி வருகின்றார்கள். ஏற்கனவே ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான படம் தர்பார்.
2020ஆம் வெளிவந்த தர்பார் படம் சரியாக போகவில்லை. இதனால் இந்த படத்தை வாங்கி விநியோகம் செய்தவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. அந்த படத்திற்கு பின்னர் ரஜினி வாங்கும் சம்பளத்தில் பெரிய அடி ஏற்பட்டது. பல கோடிகளை குறைத்துக் கொண்டார் ரஜினி.
வேட்டையாடுவது உதயநிதின்னு தெரியாமல் பிடித்த போர் கொடி
அந்த நஷ்டத்தை ஈடுகெட்ட இப்பொழுது லைக்காவை சூழ்ந்துள்ளனர் விநியோகஸ்தர்கள். ஏற்கனவே லைக்காவிடம் இதைப் பற்றி கேட்டதற்கு, அடுத்த ரஜினி படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். ஆனால் லால் சலாம் படம் இதற்கு முன்னர் வெளியானது, அந்த படத்தை எல்லாம் விட்டுவிட்டு இப்பொழுது வேட்டையனுக்கு வந்து நிற்கிறார்கள்.
வேட்டையினை படத்தை ரிலீஸ் செய்வது ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பதை மறந்துவிட்டார்கள் போல். முன்பு உதயநிதி நடிகராக இருந்தார் ஆனால் இப்பொழுது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர் அதையும் தாண்டி தற்போது துணை முதலமைச்சர் ஆகிவிட்டார். இதனால் வேட்டையன் படத்திற்காக லைக்காவிடம் வாலாட்ட முடியாது.