செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 11, 2025

ரஜினிக்கு சுத்தமா நடிக்க தெரியாதுன்னு ஸ்பாட்ல பாத்து தெரிஞ்சுகிட்டேன்.. சர்ச்சையை கிளப்பிய வேட்டையன் பட நடிகர்

Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றி சர்ச்சையான கருத்தை தெரிவித்திருக்கிறார் பிரபல நடிகர் ஒருவர்.

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக ரசிகர்களை தன் ஸ்டைலான நடிப்பின் மூலம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் ரஜினி.

ரஜினிக்கு ரொம்ப சென்டிமென்ட் காட்சிகள் செட்டாகாது. இதைத் தாண்டி உடலை வருத்திக்கொண்டு சமூக கருத்து சொல்லும் படங்களில் நடிப்பது என்பது செட்டாகாது.

சர்ச்சையை கிளப்பிய வேட்டையன் பட நடிகர்

உண்மைகள் ரஜினி ஸ்கிரீனில் செய்யும் மேஜிக் அவரால் மட்டுமே முடிந்த ஒன்று. ரஜினி சும்மா கைய கால அசைச்சு பேர் வாங்கிடுகிறார் அவருடைய சக கலைஞர்கள் நொந்து போவது கூட உண்டு.

ஆனால் ரஜினிக்கு சுத்தமாக நடிக்கவே தெரியாது என வேட்டையின் படத்தில் ஜட்ஜ் கேரக்டரில் நடித்த நடிகர் அலன்சியர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

ரஜினி மட்டும் இல்லை அமிதாப் பச்சனுக்கும் எப்படி நடிக்கணும்னு தெரியாது என்று பேசி இருக்கிறார்.

இவருடைய சர்ச்சை பேச்சுக்கு பலரும் ரஜினியை நெகட்டிவ் ஆக பேசி விளம்பரம் தேடுகிறார் போல என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Trending News