Vettaiyan Box-Office Prediction: ஜெய்பீம் ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் இன்னும் சில தினங்களில் திரைக்கு வருகிறது. சூப்பர் ஸ்டாருடன் இணைந்து இப்படத்தில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பகத் பாசில் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இதுவே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் ட்ரைலரும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதை தொடர்ந்து தற்போது படத்தின் பிரீ டிக்கெட் புக்கிங் வசூல் சாதனையை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
அதிலும் ரஜினிக்கு இந்தியாவை தாண்டி வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதில் அமெரிக்காவில் மட்டுமே வேட்டையன் டிக்கெட் புக்கிங் 40 கோடிகளை வசூலித்துள்ளது. அதேபோல் இந்திய அளவில் 8 கோடிகள் வசூல் ஆகி இருக்கிறது.
அனல் பறக்கும் டிக்கெட் புக்கிங்
இதை வைத்துப் பார்க்கும்போது இப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டுமே 100 கோடியை தாண்டும் என தெரிகிறது. அதேபோல் இதன் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் கணிப்பு 400 முதல் 500 கோடியாக இருக்கிறது.
மேலும் வேட்டையன் படம் 160 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் ரஜினிக்கு மட்டுமே 120 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி படத்தின் பிரீ பிசினஸ் மற்றும் டிக்கெட் புக்கிங் என அனைத்துமே தயாரிப்பு தரப்புக்கு தற்போது லாபத்தை தான் கொடுத்திருக்கிறது.
படம் வெளிவந்த பிறகு வரும் வசூலும் லாபம் தான். ஏனென்றால் அடுத்தடுத்த விடுமுறை தினங்கள் என்பதாலும் சூப்பர் ஸ்டார் படம் என்பதாலும் நிச்சயம் அடுத்த இரண்டு வாரத்திற்கு திரையரங்குகளில் கூட்டம் சேரும். இதன் மூலம் லைக்காவும் முந்தைய படங்களின் நஷ்டத்தை சரி கட்டி விடும். சமீபத்தில் வெளிவந்த கோட் 450 கோடி வரை வசூலித்தது. அந்த வசூலை சூப்பர் ஸ்டார் முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
வேட்டையன் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்
- 33 வருடங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இணையும் இயக்குனர்
- வேட்டையன், தளபதி 69 இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை
- வேட்டையன் படத்தில் நடிகர், நடிகைகள் வாங்கிய சம்பளம்