தங்கலான் நிச்சயமா தங்க மெடலுக்கு தகுதியுள்ள படம் தான். பா ரஞ்சித் தனக்கே உண்டான பாணியில் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் என்று கூறலாம். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த படத்திற்கு தூண் போல் நின்றவர்கள் ஆர்ட் டைரக்டர்ஸ்.
நாம் எங்கே இருக்கிறோம் என்பதையே மறக்கும் அளவிற்கு செட் மற்றும் இடங்களை தேர்வு செய்து வெளுத்து வாங்கி இருக்கிறார்கள். பா ரஞ்சித் எப்படி கோலார் தங்க சுரங்கத்தை,அந்த கால மக்கள் கையாண்டிருப்பார்கள் என்பதை அக்குவேராக காட்டியிருக்கிறார்.
படத்திற்கு மற்றொரு தூண் என்றால் விக்ரம் தான். அவருடைய நடிப்பிற்கு தீனி போடும் படமாக இது அமைந்துள்ளது. விக்ரம் நடிப்புக்கு நிச்சயமாக மெடல் கொடுத்தே ஆக வேண்டும். அவருக்கு ஈடாக பசுபதியும் படத்தில் அசத்தி இருக்கிறார்.
திரில்லர் சஸ்பென்ஸ் என படத்தை நேர்த்தியாக நகர்த்தி இருக்கிறார்கள். ஆரத்தியாக வரும் மாளவிகா மோகன் இதுவரை இல்லாத அளவிற்கு வித்தியாசமான கதாபாத்திரம் செய்திருக்கிறார் . விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் தன் பங்கிற்கு மிரட்டி இருக்கிறார்.
விக்ரமுக்கு ஏற்பட்ட மனக்காயம்
உசுரை கொடுத்து நடிக்கும் விக்ரமை சமீபத்தில் அஜித், விஜய் அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் இல்லை என பத்திரிகையாளர் ஒருவர் நோகடித்தார். ஆனால் அவரை படத்திற்கு வந்து டிக்கெட் கிடைக்கிறதா என்று பாருங்கள் என சாதுரியமாக சமாளித்தார் விக்ரம். அஜித், விஜய் இருவரும் தலைகீழ நின்றாலும் விக்ரம் அளவிற்கு நடிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்
- சொல்லப்படாத தமிழர்களின் வலி, கதி கலங்க வைத்த விக்ரம்
- விக்ரமின் 2 வருட உழைப்பு வொர்க் அவுட் ஆனதா.?
- இதுவரை தங்கலான் படத்தில் மறைக்கப்பட்ட விஷயம்