Bigg boss 7 Vichitra joins Archana Part – 2: இன்று காலையிலிருந்தே வெளியாகி கொண்டிருக்கும் பிக்பாஸ் ப்ரோமோக்கள் சுவாரசியத்தை ஏற்படுத்தி வருகிறது. அதில் விசித்ரா, அர்ச்சனாவுக்கு எதிராக பொங்கிய நிக்சன் சரியான பல்பு வாங்கினார். அதை தொடர்ந்து அடுத்த புரோமோவில் விசித்ரா புது சபதம் ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதாவது பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் யார் சிறப்பாக பங்களிக்காத போட்டியாளர்கள் என கேள்வி கேட்கப்படுகிறது. உடனே ஒன்று சேர்ந்த மொத்த கூட்டமும் விசித்ரா, அர்ச்சனா என்று மனசாட்சியே இல்லாமல் கூறுகின்றனர். அதில் விக்ரம் விச்சு நான் உங்களை எங்கயுமே பார்க்கல என சொன்னது தான் ஹைலைட்.
இவரே எதற்கு நிகழ்ச்சிக்கு வந்தோம் என்று தெரியாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அதை பிக் பாஸ் கூட நேற்று வீடியோவாக காட்டி கலாய்த்து தள்ளினார். இதில் இவர் விசித்ராவை கூறுவது காமெடியாக தான் இருக்கிறது. ஆனால் விச்சு அப்படியாடா என நக்கலாக கேட்டு அவரை நோஸ்கட் செய்தார்.
Also Read: சைக்கோவுக்கும், சைக்காலஜிக்கும் நடக்கும் யுத்தம்.. இரு அணியான பிக் பாஸ் வீடு, வெற்றி யாருக்கு.?
அதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் சுவாரஸ்யம் இல்லாத போட்டியாளர்கள் என ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதனால் கடுப்பான விசித்ரா எல்லாரும் எனக்கு ஒன்று சேர்ந்து வேணும்னே செஞ்சி இருக்கீங்க என சரியாக கூறுகிறார். அதை அடுத்து இனி தான் என்னோட ஆட்டமே இருக்கு, பார்ட் 2 பார்க்க போறீங்க என்ன புது சபதம் ஒன்றை எடுக்கிறார்.
உடனே எதிர்பாராத விதமாக அர்ச்சனாவும் என்ட்ரி கொடுத்து நானும் தான் என சொல்வது போல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர்கள் இருவரும் ஒரு அணியாக தான் செயல்பட்டு வருகின்றனர். இன்னும் அழுத்தமாக சொல்லப்போனால் அர்ச்சனாவுக்கு விசித்ரா ஒரு பலமாக இருந்து சில விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறார்.
அந்த வகையில் இவர்கள் இருவரின் கூட்டணி மாயா, பூர்ணிமாவை கடந்த சில வாரங்களாக எதிர்த்து வருகின்றனர். அதனாலேயே இப்போது இவர்களுக்குள் ஒரு பனிப்போர் தொடங்கி இருக்கிறது. அந்த வகையில் பார்ட் 2வுக்கு தயாராகி இருக்கும் விசித்ரா இனிவரும் வாரங்களில் எதிரணிக்கு என்ன ஆட்டம் காட்டப் போகிறார் என்பதை பார்ப்போம்.
Also Read: 6 படம் நடித்தும் பிக் பாஸ் மாயாவுக்கு கெஸ்ட் ரோல் தான்.. குடிமிபிடி சண்டை போட்டும் வேஸ்ட் பீஸ்