திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

மகன்களின் அன்புக்கு அடிமையான விக்கி-நயன்.. 4 லட்சம் லைக்களை குவித்த கியூட் புகைப்படங்கள்

7 ஆண்டுகளாக காதலித்துக் கொண்டிருந்த நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நான்கே மாதத்தில் இந்த ஜோடிக்கு குழந்தையும் பிறந்தது.

அதாவது தென்னிந்தியாவின் டாப் நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கெரியருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் வாடகை தாய் முறை மூலம் இரண்டு ஆண் குழந்தைக்கு தாயானார்.

Also Read: இயக்குனரை திருமணம் செய்த 6 ஹீரோயின்கள்.. காதலுக்கு அழகு முக்கியமில்லை என நிரூபித்த தேவயானி

இப்போது நயன் மற்றும் விக்கி இருவரும் தங்களுடைய மகன்களின் அன்புக்கு அடிமையாகி விட்டனர். எங்கு சென்றாலும் மகன்களுடன் தான் செல்கின்றனர். இவர்கள் இருவரும் தற்போது மகன்களுடன் தான் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதுவரை நயன்தாராவின் இரண்டு மகன்களின் முகத்தை சோசியல் மீடியாவில் காண்பிக்காமல் மறைத்து வைத்தனர்.

ஆனால் அவர்களுடைய குழந்தைகளின் கைகளை அன்புடன் அரவணைத்து பிடித்திருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். அது மட்டுமல்ல விக்னேஷ் சிவன், சூரியன் உதிக்கும் அதிகாலை வேளையில் மகனை தூக்கி வைப்பது போல் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

மகன்களின் அன்புக்கு அடிமையான விக்கி-நயன்

vicky-nayan-cinemapettai
vicky-nayan-cinemapettai

Also Read: நயன்தாராவுக்காக பட வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் விஜய்சேதுபதி.. பழக்கத்திற்காகவே இறங்கி செய்யும் காரியம்

இந்த கியூட் புகைப்படங்களுக்கு சோசியல் மீடியாவில் அவர்களுடைய ரசிகர்கள் 4 லட்சத்துக்கு மேலான லைக்குகளை குவித்துள்ளனர். மேலும் நயன்தாரா தற்போது அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் ஜவான் படத்தின் மூலம் நடித்து பாலிவுட்டில் கால் பதிக்கிறார். நயன் ஷூட்டிங் முடிந்ததும் மகன்களை கவனித்துக் கொள்வதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டு கொண்டிருக்கிறார்.

விக்னேஷ் அதிகாலையில் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்

vicky-1-cinemapettai
vicky-1-cinemapettai

அதேபோல் விக்னேஷ் சிவனுக்கு அஜித் படம் கைநழுவி சென்றாலும் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை கதாநாயகனாக வைத்து உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் அடுத்த படத்தை இயக்குவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் விக்னேஷ் சிவன் தனது மகன்கள் மற்றும் காதல் மனைவி நயன்தாரா ஆகியோருடன் எடுத்த க்யூட்டான புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தவறாமல் பதிவிடுகிறார்.

Also Read: நயன் 75-வது படத்தின் ஹீரோ யார் தெரியுமா.? 10 வருடங்களுக்குப் பின் இணையும் எவர்கிரீன் ஜோடி

Trending News