ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பா ரஞ்சித், வெங்கட் பிரபு கூட்டணியில் மிரட்டிவிட்ட ட்ரைலர்.. பயத்தை காட்டும் விக்டிம் எப்படி இருக்கு?

பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு த்ரில்லர் பாணியில் வெளிவரும் கதைகள் ரொம்பவே பிடிக்கும். அதை தெரிந்து கொண்ட இயக்குனர்கள் அது போன்ற படங்களை எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நான்கு இயக்குனர்கள் இயக்கத்தில் விக்டிம் என்ற படம் உருவாகி இருக்கிறது.

4 இயக்குனர்கள், 4 கதை களங்கள், 4 மாறுபட்ட வாழ்க்கை என மிரட்டலாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கிறது. கலையரசன், நட்டி நடராஜ், நாசர், பிரசன்னா, பிரியா பவானி சங்கர், அமலாபால் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

விவசாயம், திகில், மர்மம், சஸ்பென்ஸ் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் தற்போது அனைவருக்கும் ஒருவித ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கெட்ட சக்திகளை ஓட்டுபவராக வரும் நாசர், அமலா பாலை மிரட்டும் பிரசன்னா என்று அனைத்து கதாபாத்திரங்களும் சஸ்பென்ஸ் நிறைந்ததாகவே இருக்கிறது.

ஆக மொத்தம் இந்த படம் நான்கு மாறுபட்ட சூழலில் இருக்கும் மனிதர்கள், எந்த விஷயத்தால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அதற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன என்பதை காட்டும் என்று தோன்றுகிறது. டிரைலரில் இடம் பெற்றிருக்கும் பின்னணி இசையும் படு மிரட்டலாக இருக்கிறது.

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி இருக்கும் இப்படத்தை சோனி லைவ் நிறுவனம் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி வெளியிடுகிறது. அந்த வகையில் சிம்பு தேவன், பா ரஞ்சித், வெங்கட் பிரபு, எம் ராஜேஷ் ஆகியோர் இணைந்து இப்படத்தை நான்கு பகுதிகளாக இயக்கி இருக்கின்றனர். இதுவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்று பாவ கதைகள் என்ற ஆந்தாலஜி திரைப்படம் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. தற்போது அதே பாணியில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News