வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Ajith: விடா முயற்சிய ஆண்டவன் தான் காப்பாத்தணும்.. தள்ளிப்போகும் ரிலீஸ், காரணம் இதுதான்

Ajith: அஜித்தின் விடாமுயற்சி பல மாதங்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது. இடையில் பிரேக் விடுவதும் மீண்டும் சூட்டிங் நடத்துவதும் என ஒரு ரூட்டில் போய்க்கொண்டிருந்தது.

ஆனால் இப்போது பார்த்தால் இந்த படம் ஆண்டவன் மனசு வைத்தால் மட்டும் தான் ரிலீஸ் ஆகும் என்ற நிலையில் இருக்கிறது. அப்படித்தான் அஜித்தின் ரசிகர்களும் புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.

அஜர் பைஜானின் கிளைமேட் காரணமாக சூட்டிங் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பிறகு தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்த பிறகு ஆரம்பிக்கும் என்று சொன்னார்கள்.

தள்ளிப் போகும் விடாமுயற்சி ரிலீஸ்

ஆனால் இப்போது வரை சூட்டிங் ஆரம்பமாகவில்லை. இதற்கு லைக்கா தான் காரணம், இந்தியன் 2 ரிலீஸ் ஆனால்தான் ஷூட்டிங் ஆரம்பமாகும் என்றெல்லாம் காரணங்கள் சொல்லப்பட்டது.

இதனால் பொறுமை இழந்த அஜித் இப்போது குட் பேட் அக்லி ஷூட்டிங்கிற்கு கிளம்பிவிட்டார். ஹைதராபாத்தில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதைக் கேட்டு ரசிகர்கள் குழம்பிப்போன நிலையில் விடாமுயற்சி தீபாவளிக்கு வந்து விடும் என செய்திகள் கசிந்தது. ஆனால் அது உண்மை கிடையாது. விடாமுயற்சி சூட்டிங் ஆரம்பித்தால் மட்டுமே ரிலீஸ் பற்றி உறுதியாக சொல்ல முடியும்.

ஆக மொத்தம் லைக்கா மனது வைத்தால் தான் விடாமுயற்சிக்கு விடிவு காலம் கிடைக்கும். ஆனால் குட் பேட் அக்லி நிச்சயம் பொங்கலுக்கான விசுவல் ட்ரீட்டாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Trending News