மகிழ் திருமேனி-அஜித் கூட்டணியில் அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள விடாமுயற்சி வரும் பொங்கலுக்கு வெளிவர உள்ளது.
அனிருத் இசையில் Sawadeeka ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளிவந்து 5 மில்லியன் வியூஸ் தாண்டி Youtube-இல் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது, இதையே வெற்றியாக கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
இந்த படத்திற்கு சென்சார் போர்டு கிட்டத்தட்ட 12 இடங்களில் கட் செய்துள்ளதாம். அதிகமான Violence, ஸ்டாண்ட், கெட்ட வார்த்தைகள் மற்றும் கவர்ச்சியான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இதனை கவனித்த அஜித் ‘A’ சர்டிபிகேட் வந்துவிடக் கூடாது, காட்சிகளை கட் செய்யுங்கள் என மகிழ்திருமேனிடம் திட்டவட்டமாக தெரிவித்து விட்டாராம்.
விறுவிறுப்பான ரிலீஸ் நோக்கி சென்று கொண்டிருக்கும் விடாமுயற்சிக்கு இன்னும் பெரும் பிரச்சனை உள்ளது. அதாவது BreakDown பட ரீமேக் என்பதை ஒப்புக்கொண்ட படக் குழுவினர் இதற்காக 30 கோடி செட்டில்மெண்ட் செய்ய வேண்டிய இருக்கிறது.
இந்த பாக்கி தொகையை கொடுத்தால் மட்டுமே படம் எந்த ஒரு தடையும் இன்றி விடாமுயற்சி திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாரத்தில் செகண்ட் சிங்கிள் மற்றும் பைனல் ட்ரெய்லரை எதிர்பார்க்கலாம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.