Vidaamuyarchi: அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி உருவாகிக் கொண்டிருக்கிறது. இதில் விடாமுயற்சி ஒரு வருடத்திற்கும் மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பல தடங்கல்களின் காரணமாக தாமதமான இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று விடாமுயற்சியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதற்காகவே பெரும் ஆர்வத்துடன் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
ஏனென்றால் போஸ்டர் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் அனைவரின் கருத்தாக உள்ளது. இத்தனை மாதங்கள் அனைவரையும் காக்க வைத்து ஒரு போஸ்டரை லைக்கா வெளியிடுகிறது. அப்படி இருக்கும் போது அது மிகவும் ஸ்பெஷல் ஆக இருந்திருக்க வேண்டும்.
ஏமாற்றிய விடாமுயற்சி
ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் அஜித் நடந்து செல்லும் போது எடுக்கப்பட்ட போட்டோவை ரிலீஸ் செய்தது போல் இருக்கிறது அந்த போஸ்டர். இதற்கு ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டரே பரவாயில்லை.
இதை தான் இப்போது நெட்டிசன்களும் கூறி வருகின்றனர். அது மட்டும் இன்றி ரசிகர்கள் தயார் செய்த சில போஸ்டர்களையும் ஷேர் செய்து வருகின்றனர். அவை அனைத்தும் விடாமுயற்சியின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விட பல மடங்கு சிறப்பாக இருக்கிறது.
மேலும் இப்படத்தில் அஜித் இரு கேரக்டர்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஒன்று இப்போது இருக்கும் தோற்றத்திலும் மற்றொன்று காதல் மன்னன் படத்தில் வருவது போன்றும் இருக்கிறதாம்.
அது நிச்சயம் ரசிகர்களை மிரள வைக்கும் என படகுழுவில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது. ஆக மொத்தம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏமாற்றினாலும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தரமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே சொதப்பிய விடாமுயற்சி
- ஒருவழியா தரிசனம் கொடுத்த அஜித்
- இடியாப்ப சிக்கலாய் தவிக்கும் விடாமுயற்சி படம்
- விடாமுயற்சிக்கு பிரேக், தடபுடலாக முடிந்த அர்ஜுன் மகள் திருமணம்