அட்ட காப்பிக்கு அம்புட்டு நாளா மகிழ் திருமேனி செய்த அக்கப்போர்.. ஹாலிவுட் படத்தை நியாயமாய் சுட்ட இயக்குனர்

விடாமுயற்சி படம் அஜர்பைஜான் ஷெடியூல்களை எல்லாம் முடித்துவிட்டு மொத்த யூனிட்டும் இன்று சென்னை திரும்புகிறது. அஜித்தும் அவர்களுடனே விமானத்தில் இன்று வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடக்க உள்ளது.

இந்த படம் இவ்வளவு தூரம் வருவதற்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள், குளறுபடிகள் என மொத்த பட யூனிட்டும் பல பல பிரச்சனைகளை சந்தித்தது. இப்பொழுது கிட்டத்தட்ட 70% இந்த படம் முடிந்து விட்டது. இனிமேல் உள்ளூரில் மட்டும் தான் இறுதி கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

லைக்கா பண பிரச்சனை, அஜித் – மகிழ்திருமேனி ஈகோ பிரச்சனை, த்ரிஷா கால்ஷீட் பிரச்சனை, ஆஜர் பைஜானில் மணல் புயல் பிரச்சனை என ஏகப்பட்ட இன்னல்களை சந்தித்து ஒரு வழியாக துபாயில் நடத்த வேண்டிய படப்பிடிப்புகளை முடித்துவிட்டு சென்னை வந்துள்ளனர்.

ஹாலிவுட் படத்தை நியாயமாய் சுட்ட இயக்குனர்

விடாமுயற்சி படம் 19970 இல் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ஹாலிவுட் படத்தின் அட்டகாபி என்கிறார்கள். ஜோனாதன் மாஸ்ரோ என்ற ஹாலிவுட் இயக்குனர் இயக்கிய படம் பிரேக் டவுன். இந்த படத்தை தான் விடாமுயற்சி என தமிழில் இயக்குகிறார் மகிழ் திருமேனி. இதற்கான எல்லா ரைட்சையும் அவர்களிடமிருந்து முறையாக வாங்கியுள்ளனர்.

இந்த படத்தின் கதைப்படி ஹீரோவின் மனைவியை சில பேர் கடத்தி செல்வார்கள். அதை ஹீரோ கண்டுபிடிப்பது தான் பிரேக் டவுன் படத்தின் கதை. தம்பதியர் வாங்கிய புதிய காரில் லாங் ட்ரிப் செல்லும்போது இந்த அசம்பாவிதம் ஏற்படும். இதுதான் விடாமுயற்சி கதை என்கிறார்கள்.

Next Story

- Advertisement -