சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

விடாமுயற்சியை பல கோடி கொடுத்து தட்டி தூக்கிய Netflix.. Lyca-வுக்கு ஆப்பு அடித்த BreakDown டீம்

பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்த்து விடாமுயற்சி பிப்ரவரி 6ஆம் தேதி வெளி வருகிறது என்பதை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அஜித்துடன் த்ரிஷா ஜோடி போட்டுள்ளார்.

அர்ஜுன், ஆரவ், ரெஜினா, நிகில் நாயர் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.பல பிரச்சனைகளை சந்தித்து வந்த விடாமுயற்சி தற்போது NOC வாங்கி Netflix OTT தளத்திற்கு விற்கப்பட்டுள்ளது.

BreakDown பட கதையின் தழுவல் இருப்பதால் Paramount Pictures தங்களுக்கு 150 கோடி வரை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த பேச்சுவார்த்தை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதாவது தற்போது 11 கோடி கொடுத்துவிட்டு மொத்த வசூலில் ஷேர் கேட்டுள்ளனர்.இதற்கு Lyca ஒப்புக்கொண்டதால் என்ஓசி வழங்கப்பட்டுள்ளது.இது ஒரு விதத்தில் ஆப்பு என்றாலும் வேறு வழி இல்லை.

இந்த பிரச்சனை முடிந்தவுடன் Netflix விடாமுயற்சி படத்தை 75 கோடிக்கு தட்டி தூக்கி உள்ளது. அதிக எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள விடாமுயற்சி கண்டிப்பாக 600 கோடி வரை வசூல் செய்யலாம்.

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். எது எப்படியோ அஜித்தின் தரிசனத்தை திரையில் பார்த்துக் கொண்டாடுவதற்கு ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

Trending News