வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தீபாவளி ரேஸில் இருந்து ஜகா வாங்கிய விடாமுயற்சி.. கடும் அப்செட்டில் அஜித்

Vidaamuyarchi Release date: விடாமுயற்சி படத்தின் அடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்த்து இருந்த அஜித் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் கிடைத்திருக்கிறது. ஏற்கனவே அஜித் படம் ரிலீஸ் ஆகி கிட்டதட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. துணிவு படத்துடன் ரிலீஸ் ஆனது விஜயின் வாரிசு.

அதன் பின்னர் அவர் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆகி, இப்போது GOAT படம் ரிலீஸ்க்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. ஆனால் விடாமுயற்சி படம் மட்டும் இடியாப்ப சிக்கல் போல் இழுத்துக் கொண்டே தான் போகிறது. இந்த படத்தின் படபிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த அஜித்

பட குழு அஜர்பைஜான் போவதும் சென்னை திரும்புவதும் ஆக இருக்கிறார்களே தவிர பட ரிலீஸ் தேதியில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு இடையில் தீபாவளி அன்று விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆகும் என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.

அதற்கு ஏற்றது போல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டு இருந்தார்கள். கடைசியில் தற்போது விடாமுயற்சி தீபாவளி ரேசில் இல்லை என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை வரும் பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய பட குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் அதே தேதியில் ரிலீஸ் ஆக இருக்க நிலையில், தலைவருக்கு வழிவிட்டு அஜித் குமார் ஒதுங்கி விட்டதாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் இன்னும் ரிலீஸ் தேதி அறிவிப்பு பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த செய்தியும் வெளியாகவில்லை.

Trending News